Idhayam Matrimony

வடபழனியில் நகை வியாபாரியிடம் ரூ.20 கோடி வைரம் திருடப்பட்ட சம்பவத்தில் நான்கு பேர் கைது

திங்கட்கிழமை, 5 மே 2025      தமிழகம்
Jail

சென்னை, வடபழனியில் நகை வியாபாரியை கட்டி போட்டு ரூ.20 கோடி மதிப்புள்ள வைரத்தை திருடிச் சென்ற சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அண்ணா நகரைச் சேர்ந்தவர் வைர நகை வியாபாரி சந்திரசேகர். இவர் வைரங்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வருகிறார். இவரிடம், மற்றொரு வியாபாரி ரூ.20 கோடி மதிப்பில் வைரம் வேண்டும் என கேட்டுள்ளார். அவற்றை வடபழனியில் உள்ள பிரபல ஓட்டலுக்கு கொண்டு வரும்படி கூறியுள்ளார்.

அதன்படி, சந்திரசேகர் ரூ.20 கோடி மதிப்புள்ள வைர நகைகளுடன் நேற்று வடபழனியில் உள்ள ஓட்டலுக்கு சென்றார். அங்கு ஓட்டல் அறையில் மறைந்திருந்த 4 பேர் சந்திரசேகரை கட்டி போட்டுவிட்டு ரூ.20 கோடி மதிப்பிலான வைர நகைகளுடன் காரில் தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ஓட்டலில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாக வைத்து வைரத்துடன் தப்பிய கும்பலை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் வைரத்தை திருடிவிட்டு தப்பிய 4 பேரை தூத்துக்குடி போலீசார் கைது செய்துள்ளனர். சிவகாசி அருகே காரில் சுங்கச்சாவடியை கடக்க முயன்றபோது போலீசார் கைது செய்தனர்.

லண்டன் ராஜன், அவரது நண்பர், உதவியாளர் என 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 4 பேரையும் சென்னை அழைத்து வர போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து