முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலூரில் 40 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல்

வியாழக்கிழமை, 24 ஏப்ரல் 2025      தமிழகம்
Rupees

கடலூர், கடலூரில் தனியார் சொகுசு பேருந்தில் எடுத்து வரப்பட்ட ரூ.40 லட்சம் ஹவாலா பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது குறித்து ஒருவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் இருந்து மன்னார்குடி செல்லும் தனியார் சொகுசு பேருந்து நேற்று ( ஏப்.24) அதிகாலை சுமார் 2 மணிக்கு கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடி பகுதிக்கு வந்தது. சோதனை சாவடியில் இருந்த போலீஸார் அந்த சொகுசு பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் எந்த ஆவணங்களும் இன்றி ரூ 40 லட்சம் ஹவாலா பணம் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த பணத்தை எடுத்துக் கொண்டு பயணம் செய்த சென்னை எல்லீஸ் ரோடு பகுதியை சேர்ந்த முகமது மிதார் மகன் நவீத் அன்வர்(26) என்பவரை போலீஸார் பிடித்து கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் எந்த விதமான ஆவணங்களும் இன்றி எடுத்து வரப்பட்ட ஹவாலா பணம் ரூ. 40 லட்சத்தையும் பறிமுதல் செய்தனர். தனியார் சொகுசு பேருந்தில் ஹவாலா பணம் ரூ 40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது கடலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து