முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுலுக்கு நோட்டீஸ்

வெள்ளிக்கிழமை, 2 மே 2025      இந்தியா
sonia-gandhi

Source: provided

புதுடெல்லி : நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பல கோடி சொத்துகளை காங்கிரஸ் கட்சி  அபகரித்ததாக பா.ஜ.க. மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடுத்திருந்தாா். இதையடுத்து, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து காங்கிரஸ் மூத்த தலைவா்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட 7 பேரிடம் விசாரணை நடத்திய நிலையில், குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தது. இந்தவழக்கு கடந்த வாரம் விசாரணைகு வந்தது.

அப்போது, குற்றப்பத்திரிகையை ஆய்வு செய்வதற்கு முன்பு, சோனியாகாந்தி, ராகுல்காந்தி உள்ளிட்டோரின் கருத்துகளை அறிய அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு அமலாக்கத்துறை கேட்டுக்கொண்டது. ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதி வழக்கை 2-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். இதன்படி, நேஷனல் ஹெரால்டு வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே, ராகுல் காந்தி மற்றும் சோனியாவுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கின் விசாரணை வரும் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து