முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் பஹல்காம் தாக்குதல்: பாக்., ராணுவம், ஐ.எஸ்.ஐ., லஷ்கர் பயங்கரவாதிகள் தொடர்பு அம்பலம்

வெள்ளிக்கிழமை, 2 மே 2025      இந்தியா
Balgam Attack-2025-04-24

Source: provided

புதுடில்லி : காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானில் செயல்படும் ஐ.எஸ்.ஐ., மற்றும் லஷ்கர் பயங்கரவாதிகள், பாக்., ராணுவத்தினர் தொடர்பு அம்பலம் ஆகி உள்ளது.  

ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் படுகொலை தொடர்பாக தேசிய புலனாய்வு படையினர் (என்.ஐ.ஏ.,) அங்கு முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., மற்றும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் தான் இதில் ஈடுபட்டுள்ளனர் என்ற விவரம் தெரிய வந்துள்ளது. மேலும் இவர்களுக்கு பாகிஸ்தான் ராணுவமும் பின்புலத்தில் இருந்து உதவி புரிந்துள்ளது.

பயங்கரவாதிகளுடன் ராணுவத்தினர் தொடர்பில் இருந்தனர். பாகிஸ்தானிடமிருந்து வழிகாட்டுதலையும் நிதியையும் பெற்றுள்ளனர். பயங்கரவாதிகளுக்கு தளவாடம் வழங்குதல், தகவல், திரட்டி கொடுத்தல், உள்ளூர் பகுதிகள் குறித்த அடையாளம் தெரிவித்தல் மற்றும் பதுங்கு இடங்கள் உள்ளிட்டவற்றை உள்ளூர்வாசிகள்தான் வழங்கியுள்ளனர். மேலும் தாக்குதல் நடப்பதற்கு முன் ஒரு வாரம் முன்னதாக இந்த பகுதிக்கு அவர்கள் வந்துள்ளனர். பஹல்காம் பகுதியில் 2 நாட்கள் நோட்டமிட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய புலனாய்வு படை இயக்குநர் ஜெனரல்  தலைமையில் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை, விரைவில் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்படும். பின்னர் ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச மன்றங்களில் ஆதாரங்களை வழங்கப்படும். தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும் என மத்திய அரசு வட்டாரம் தெரிவிக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து