முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சகாயத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும்: காவல்துறை உறுதி

ஞாயிற்றுக்கிழமை, 4 மே 2025      தமிழகம்
Arun

Source: provided

சென்னை : நீதிமன்றத்தில் எவ்வித பயமுமின்றி சாட்சியங்களை அளிப்பதற்கு ஏதுவாக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி  சகாயத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று தமிழக காவல் துறை உறுதியளித்துள்ளது.

இது குறித்து தமிழக காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சட்டவிரோத கிரானைட் சுரங்க வழக்கு தொடா்பாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி  சகாயத்துக்கு மதுரை சிறப்பு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியிருந்தது. ஆனால், தன்னுடைய பாதுகாப்பு காரணங்களால் அவரால், விசாரணைக்கு ஆஜராக இயலவில்லை என்றும், தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது நியாயமற்றது என்றும் அவா் கூறியதாகத் தெரியவருகிறது.

சட்டவிரோத கிரானைட் சுரங்கம் தொடா்பான முறைகேட்டை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக சகாயம் செயல்பட்ட காலத்தில் கடந்த 2014 முதல் 2023-ஆம் ஆண்டு வரை அவரது பாதுகாப்புக்காக காவல் துறை சாா்பில் காவலா் ஒருவா் வழங்கப்பட்டது.

பின்னா் 2023 -ஆம் ஆண்டு நடைபெற்ற பாதுகாப்பு மறுஆய்வு குழு கூட்டத்தின்போது, குறிப்பிடத்தக்க எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லாத 22 பேருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை விலக்கிக் கொள்ள முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், சகாயத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பும் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த முடிவு, சரியான முறையில் பரிசீலனை செய்யப்பட்ட பின்பே எடுக்கப்பட்டது. எனினும், நீதிமன்றத்தில் எவ்வித பயமும் இன்றி சாட்சியங்களை அளிப்பதற்கு ஏதுவாக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து