எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலினின் பல்வேறு திட்டங்களால் மகளிர் நலன்களை மேம்படுத்துவதில் இந்தியாவிற்கே தமிழ்நாடு வழிகாட்டியாக உள்ளது என்று தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
மகளிர் முன்னேற்றத்தில் இந்தியாவிற்கே தமிழ்நாடு வழிகாட்டி என்று அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.-
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021-ல் ஆட்சிப் பொறுப்பேற்றபின் மகளிர் சமுதாய மேம்பாட்டிற்குப் புரட்சிகரமான புதிய பல திட்டங்களை அறிமுகப்படுத்தி மகளிர் சமுதாயத்தை உயர்த்தி வருகிறார்கள். அதன்படி, மகளிர் விடியல் பயணம் திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம், புதுமைப் பெண் திட்டம், பணிபுரியும் மகளிர்க்கு தோழி விடுதிகள் திட்டம், அரசுப் பணிகளில் மகளிர்க்கு 40% இட ஒதுக்கீடு திட்டம், சுய உதவி குழு மகளிருக்கு கடன் வரம்பை அதிகரிக்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024:-
சமூகத்தில் பெண்களின் வளர்ச்சியைக் கொண்டே சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியினை மதிப்பிட இயலும்; பாலின வேறுபாடுகளைக் களைந்திடவும், பெண்களுக்கான சமூகநீதி மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்திடும் வகையிலும், பெண்களுக்கு உரிய அங்கீகாரம், சமூகநீதி, பாலின சமத்துவம், ஆகியவற்றை அளித்திடும் வகையிலும், தமிழ்நாடு அரசின் சார்பில் "தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை" 2024-ஐ முதல்வர் மு.க.ஸ்டாலின் 21.2.2024 அன்று வெளியிட்டு மகளிர் உரிமைக்கு வழிவகுத்துள்ளார்கள்.
விடியல் பயணம்:-
மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றவுடன் கோட்டைக்கு வந்து முதன் முதல் ஆணை பிறப்பித்த 5 திட்டங்களில் ஒன்று விடியல் பயணத்திட்டம். பெண்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர்கள் ஆகியோர்க்கான கட்டணமில்லா விடியல் பயணம் திட்டத்தில் இது வரையில் 682.02கோடி முறை பயணம் செய்துள்ளனர். திருநங்கைகள் 36.89 லட்சம் முறையும், , மாற்றுத்திறனாளிகள் 3.78 கோடி முறையும் பயணம் செய்து பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் பயனாக மகளிர் மாதம் ஒன்றுக்கு 888 ரூபாய் வரை சேமிக்கும் வாய்ப்பைப் பெற்று மகிழ்கின்றனர்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை:-
ஏழை மக்களின் குடும்பங்களிலும், கிராமப் பொருளாதாரத்தைச் சுமக்கும் முதுகெலும்பாகப் பெண்கள் திகழ்கிறார்கள். பெண்களின் உழைப்பை முறையாக அங்கீகரிக்கும் நோக்கில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவேதான், முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தத் திட்டத்திற்கு மகளிருக்கான உதவித் தொகை என்று கூறாமல் 'மகளிர் உரிமைத் தொகை என்று பெயரிட்டுள்ளார்கள். இத்திட்டத்தில் இதுவரை 1 கோடியே 15 லட்சம் மகளிர் மாதந்தோறும் ரூ1,000 உரிமைத் தொகையாக அவரவர் வங்கிக் கணக்குகளில் பெற்று வருகிறார்கள். இந்த மகளிர் உரிமைத் தொகை இதுவரை கிடைக்காத தகுதிவாய்ந்த மகளிர் அனைவருக்கும் வழங்கிட அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
புதுமைப் பெண் திட்டம்:
முதல்வர் மு.க.ஸ்டாலினின். ஒரு புரட்சிகரமான திட்டம் இது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் பயின்ற மாணவியர், தடையின்றி உயர் கல்வி பயில வேண்டும் என்ற நோக்கத்தோடு, தமிழ்நாட்டில் உள்ள மாநில அரசு, மத்திய அரசு சார்ந்த, மருத்துவக் கல்லூரி உட்பட உயர் கல்வி நிறுவனங்களில், இளநிலைப் பட்டப் படிப்பில் சேரும் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகின்றது.
நேரடிப் பணப் பரிமாற்ற முறைப்படி, இந்த உதவித்தொகையை இதுவரை 4,95,000, மாணவியர் நேரடியாகத் தம் வங்கிக் கணக்குகளில் பெற்று முதல்வருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். இத்திட்டத்தின் காரணமாகப் பள்ளிப்படிப்பை முடித்துக் கல்லூரிகளில் சேரும் மாணவியர் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளது என மாநில திட்டக் குழுவின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் ரத்து:-
கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட மகளிர் சுயஉதவிக் குழுக் கடன்களில் 31.3.2021 அன்றைய தேதியில் நிலுவையில் இருந்த கடன் தொகை ரூ.2,755.99 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. 1,17,617 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த 15,88,309 மகளிர் பயன்பெற்றுள்ளனர்.
மகளிர் இடஒதுக்கீடு 40 சதவீதம்:-
அரசுப் பணிகளில் மகளிர்க்கான இடஒதுக்கீடு 30 சதவீதம் என முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 1989ஆம் ஆண்டில் சட்டமியற்றி நடைமுறைப் படுத்தினார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட நாயகர் அவர்கள் இந்த இடஒதுக்கீடு 30 சதவீதம் என்பதை 40 சதவீதமாக உயர்த்தி மகளிர் அதிக அளவில் வேலைவாய்ப்புகளைப் பெற வழிவகுத்துள்ளார்.
கடன் உச்சவரம்பு அதிகரிப்பு:-
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கிடும் கடன் உச்ச வரம்பை ரூ.12 லட்சம் என்பதில் இருந்து ரூ.20 லட்சமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உயர்த்தி உத்தரவிட்டார். 2016 முதல் 2020 வரை நான்கு ஆண்டுகளில் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் ரூ. 39,468.88 கோடி. ஆனால் திராவிட மாடல் ஆட்சியில் 2021 -முதல் 2025 வரை வழங்கப்பட்டுள்ள கடன் ரூ. 1,12,299 கோடி. அரசு அலுவலகங்களில் பணி புரியும் மகளிர் ஆசிரியைகளின் மகப்பேறு விடுப்பு 9 மாதம் என்பது 12 மாதங்களாக 2021ம் ஆண்டு முதல் உயர்த்தி வழங்கப்படுகிறது.
காவல்துறையில் பெண்கள்:-
பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க 39 புதிய மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெண் காவலர்கள், முக்கியப் பிரமுகர்களின் வருகையின்போது வீதிகளில் நீண்ட நேரம் நிற்கவைப்பதைத் தடுத்து, அவர்களுக்கு இலகுவான பணிகள் வழங்க ஆணையிட்டு, அவ்வாறே வழங்கப்படுகிறது தமிழ்நாடு காவல்துறையில் மகளிர் காவலர்கள் இணைந்து 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து, நடைபெற்ற பொன்விழா நிகழ்ச்சியில் சிறப்புத் தபால் உறை வெளியிடப்பட்டு, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவள் திட்டம் அறிமுக செய்யப்பட்டுள்ளது.
அறநிலையத் துறையில் பெண் ஓதுவார்கள்:-
திருக்கோவில்களில் அனைத்துச் சாதியாரும் அர்ச்சகர் திட்டத்தின்கீழ் ஓதுவார் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ஓதுவார் பயிற்சி பெற்றவர்களில் 42 பேர் ஓதுவார்களாக நியமிக்கப்பட்டனர். அவர்களில் 11 பேர் பெண் ஓதுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு 1996இல் வழங்கப்பட்டது . பின்னர் 50 சதவீதமாக உயர்த்தப்பட்டு, லட்சக் கணக்கான மகளிர் உள்ளாட்சி நிறுவனங்களில் பதவிப் பொறுப்புகள் பெற்றுத் தமிழ்நாட்டு முன்னேற்றத்திற்குப் பாடுபடுகின்றனர். இன்று 21 மாநகராட்சிகளின் மேயர்களில் 11 மகளிர் பெண் மேயர்களாக விளங்குவது தமிழ்நாட்டிற்குரிய தனிச் சிறப்பாகும்.
சிப்காட் தொழில் வளாகங்களில் குழந்தைகள் காப்பகங்கள்:-
முதல்வர் மு.க.ஸ்டாலின் பெண்கள் நலனில் கொண்டுள்ள அக்கறையை நமக்கு காட்டும் ஒரு மகத்தான திட்டம் - குழந்தைகள் காப்பகங்கள் ஆகும். தொழிற்சாலைகளில் வேலைக்குச் செல்லும் பெண்கள் முன்னேற்றத்திற்காக, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள 17 சிப்காட் தொழில் பூங்காக்களில் குழந்தைகள் காப்பகங்களை தொடங்கிட உத்திரவிட்டார். இந்த 17 தொழிற் பூங்காக்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள குழந்தைகள் காப்பகங்களில் ஏறத்தாழ 3 இலட்சத்து 23 ஆயிரம் தொழிலாளர்கள் பயன்பெறுகின்றார்கள். இந்தக் குழந்தைகள் காப்பகங்கள், பணிபுரியும் பெற்றோரின், குறிப்பாகப் பெண்களின் மன அழுத்தத்தைக் குறைக்கவும், பெண் தொழிலாளர்கள் அதிகளவில் பணியாற்றக்கூடிய சூழலை உருவாக்கவும் உதவுகின்றன. இப்படி, முதல்வர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் அரசில் புதிய புதிய திட்டங்கள் நிறைவேற்றி மகளிர் நலன்களை மேம்படுத்துவதில் தமிழ்நாடு இந்தியாவிற்கே வழிகாட்டி வருகிறது என்பதை வரலாறு போற்றுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 2 weeks ago |
-
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா தலையீடு : அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு
14 May 2025சவுதி : இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் தனது தலையீடு இருந்தது என்று மீண்டும் வலியுறுத்திப் பேசியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்.
-
350 ட்ரோன்களை பறக்கவிட்டு பாகிஸ்தான் வீரர்களுக்கு பயிற்சி அளித்த துருக்கி..!
14 May 2025புதுடில்லி : இந்தியாவுக்கு எதிரான போரின் போது, பாகிஸ்தானுக்கு 350 ட்ரோன்களையும், அதனை இயக்குவதற்கு ஆபரேட்டர் களையும் துருக்கி வழங்கியது தெரிய வந்துள்ளது.
-
தங்கம் விலை ரூ.400 சரிவு
14 May 2025சென்னை : சென்னையில் நேற்று (மே 14) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.70,440க்கு விற்பனையானது.
-
கோடநாடு வழக்கிலும் நிச்சயம் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
14 May 2025ஊட்டி : பொள்ளாச்சி வழக்கை போன்று கோடநாடு வழக்கிலும் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவர் என்று ஊட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு கூடுதல் பாதுகாப்பு
14 May 2025புதுடெல்லி : பாகிஸ்தான் - இந்தியா போர் பதற்றம் சற்று தணிந்திருக்கும் நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.
-
தமிழ்நாட்டிற்கான அனைத்தையும் பெற்று தரும் இயக்கம் அ.தி.மு.க : எடப்பாடி பழனிசாமி பேட்டி
14 May 2025சென்னை : தமிழ்நாட்டிற்கான அனைத்தையும் பெற்று தரும் இயக்கம் அ.தி.மு.க என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
ஊட்டி தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்
14 May 2025ஊட்டி : ஊட்டி தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார். கண்காட்சி வருகிற 25-ம் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது.
-
ஜனாதிபதி திரெளபதி முர்முவுடன் முப்படை தளபதிகள் சந்திப்பு : ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம்
14 May 2025புதுடில்லி : 'ஆபரேஷன் சிந்தூர்' திட்டம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, டில்லியில் ஜனாதிபதி திரெளபதி முர்முவை அவரது இல்லத்தில் முப்படை தளபதிகள் மற்றும் முப்படை தலைமை தளபதி அ
-
டெல்லி: மாற்று வீரர் அறிவிப்பு
14 May 202518-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வந்தது.
-
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: மத்திய, தமிழக அரசு, அமாலாக்கத்துறை பதில் அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு
14 May 2025சென்னை : டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக தமிழக அரசு, மத்திய அரசு, அமலாக்கத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை பதில் அளிக்கக்கோரி உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.
-
தமிழகத்தில் தருமபுரி, வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
14 May 2025சென்னை : தமிழகத்தில் இன்று (மே 15) ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய
-
நீலகிரி அரசு மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு : நோயாளிகளிடம் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்
14 May 2025ஊட்டி : முதல்வர் மு.க.
-
அடுத்த 4 நாட்களுக்கு தென்னிந்தியாவில் கனமழை
14 May 2025சென்னை : தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யக்கூடும்.
-
ஜி.பி.முத்து - கிராம மக்கள் இடையே வாக்குவாதம்
14 May 2025தூத்துக்குடி : ஜி.பி. முத்து மற்றும் கிராம மக்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
அனைவருக்கும் சாமி கும்பிடுவதற்கு உரிமை உண்டு: தேர் திருவிழாவை பட்டியலின மக்கள் வேடிக்கை மட்டும்தான் பார்க்கனுமா ? - மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி
14 May 2025மதுரை : அனைவருக்கும் சாமி கும்பிடுவதற்கு உரிமை உண்டு, தேர் திருவிழாவை பட்டியலின மக்கள் வேடிக்கை மட்டும்தான் பார்க்க வேண்டுமா?
-
10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே.16-ல் வெளியீடு : அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
14 May 2025சென்னை : கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற 2024-25-ம் கல்வி ஆண்டுக்கான 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருகிற 16-ம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியாகும் என்ற
-
அருணாச்சல் எங்களுடையதே: சீனாவுக்கு இந்தியா கண்டனம்
14 May 2025புதுடெல்லி : அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளின் பெயரை சீனா மாற்றியுள்ள நிலையில் அதற்கு இந்தியா தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
-
பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு கைது செய்யப்பட்ட இந்திய வீரரை ஒப்படைத்தது பாக்.,
14 May 2025புதுடெல்லி : பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட பிஎஸ்எஃப் வீரரை பாகிஸ்தான் இந்தியாவிடம் நேற்று (மே.14) ஒப்படைத்தது.
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா..? - முகமது ஷமி மறுப்பு
14 May 2025மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக வெளியான தகவலுக்கு முகமது ஷமி மறுப்பு தெரிவித்துள்ளார்.
ரோகித் - கோலி...
-
பாக். குண்டுகளை செயலிழக்கும் பணியில் இந்திய ராணுவம் தீவிரம்
14 May 2025ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரஜோரியில் உள்ள எல்லைப் பகுதி அருகே வெடிக்காத பாகிஸ்தான் குண்டுகளை இந்திய ராணுவம் செயலிழக்கச் செய்துள்ளது.
-
சுப்ரீம் கோர்ட்டின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்பு : ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்
14 May 2025புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் நேற்று (மே 14) பதவியேற்றுக் கொண்டார்.
-
கனடா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆனார் அனிதா ஆனந்த்..!
14 May 2025ஒட்டாவா : கனடா நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரியாக அனிதா ஆனந்த் நியமனம் செய்யப்பட்டார்.
-
சீனா - துருக்கி ஊடகத்தின் எக்ஸ் பக்கங்கள் முடக்கம் : மத்திய அரசு நடவடிக்கை
14 May 2025புதுடெல்லி : சீன அரசு ஊடகமான க்ளோபல் டைம்ஸின் எக்ஸ் கணக்கை இந்திய அரசு முடக்கியுள்ளது.
-
வேதியியல் வினாத்தாள் வெளியானதா? - ஒரே தேர்வு மையத்தில் 167 மாணவிகள் சென்டம்
14 May 2025செஞ்சி : செஞ்சி ஒன்றியத்தில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் தேர்வெழுதிய 167 பேர் வேதியியல் பாடத்தில் 100 மதிப்பெண் எடுத்து உள்ளனர்.
-
சிரியாவின் இடைக்கால அதிபரை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்
14 May 2025ரியாத் : சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் முதலீட்டு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கலந்துகொண்டார்.