முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி: ஆஸி. - தென்ஆப்பிரிக்க அணிகள் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 13 மே 2025      விளையாட்டு
Australia 2024-02-06

Source: provided

மெல்போர்ன் : 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இந்திய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 3 - 1 என வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மறுபுறம், தென்னாப்பிரிக்காவும் அதிக வெற்றிகளை பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இந்த இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 11 அன்று தொடங்க உள்ளது.

ஆஸ்திரேலிய அணி.... 

இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி நேற்று காலை அறிவிக்கப்பட்டது. ஐபிஎல் தொடரில் இடம் பெற்ற டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்டார்க், ஹசில்வுட் ஆகியோர் இந்த டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் டெஸ்ட் தொடருக்காக ஐபிஎல் தொடரில் விலக வாய்ப்பு உள்ளது.

ஆஸி. வீரர்கள் விவரம்:-

உஸ்மான் கவாஜா, சாம் கோன்ஸ்டாஸ், மார்னஸ் லாபுசாக்னே, கேமரூன் கிரீன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஜோஷ் ஹேசில்வுட், ஸ்காட் போலண்ட், நாதன் லியோன், மேத்யூ குஹ்னெமன், பிரெண்டன் டாகெட் (டிராவலிங் ரிசர்வ்).

16 பேர் கொண்ட...

இந்நிலையில் டெம்பா பவுமா தலைமையிலான 16 பேர் கொண்ட டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் ஐபிஎல் தொடரில் முக்கிய பங்கு வகிக்கும் ஐடன் மார்க்ரம், மார்கோ ஜான்சன், ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கல்டன் ஆகியோர் உள்ளனர். இது ஐபிஎல் அணிகளுக்கு பின்னடைவாக இருக்கும்.

அணி விவரம்:-

டெம்பா பவுமா (கேப்டன்), டோனி டி ஜோர்ஜி, ஐடன் மார்க்ரம், வியான் முல்டர், மார்கோ ஜான்சன், ககிசோ ரபாடா, கேசவ் மகராஜ், லுங்கி என்கிடி, கார்பின் போஷ், கைல் வெர்ரைன், டேவிட் பெடிங்ஹாம், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கல்டன், செனுரன் பட்டுசாமி, டேன் பட்டுசாமி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து