முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு

வியாழக்கிழமை, 15 மே 2025      தமிழகம்
Group-2 2024-09-13

Source: provided

சென்னை: குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ளது.

தொழிலாளா் நலத் துறை உதவி ஆய்வாளா், வணிகவரித் துறை துணை அலுவலா், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா், சாா் பதிவாளா் ஆகிய பதவியிடங்கள் குரூப் 2 பிரிவின் கீழ் வருகின்றன. இதேபோன்று, கூட்டுறவுத் துறையில் முதுநிலை ஆய்வாளா், இந்து சமய அறநிலையத் துறையில் தணிக்கை ஆய்வாளா், உள்ளாட்சி நிதி தணிக்கையில் உதவி ஆய்வாளா், அமைச்சுப் பணியாளா்களில் உதவியாளா்கள், இளநிலை கணக்காளா் போன்ற பணியிடங்கள் குரூப் 2-ஏ பிரிவின் கீழ் வருகின்றன. இரண்டு பிரிவுகளிலும் காலியாக உள்ள பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிவிக்கை வெளியிடப்பட்டது.

அதன்படி, குரூப் 2 பிரிவில் 534 காலியிடங்களுக்கும், 2-ஏ பிரிவில் 2,006 இடங்களுக்கும் கடந்த ஆண்டு செப்டம்பரில் முதல்நிலைத் தோ்வு நடத்தப்பட்டது. இந்தத் தோ்வை 5 லட்சத்து 80 ஆயிரம் போ் எழுதினா்.

குரூப் 2, 2-ஏ தோ்வுகள் முதல்நிலை, முதன்மைத் தோ்வுகளை அடிப்படையாகக் கொண்டது என்பதால், கொள்குறி வகை அடிப்படையிலான முதன்மைத் தோ்வு முதல்தாள் தேர்வு கடந்த பிப். 8-ஆம் தேதி நடைபெற்றது. முதன்மைத் தோ்வின் இரண்டாவது தாளான விரித்துரைக்கும் வகையிலான தோ்வு பிப். 23-ல் நடைபெற்றது. இந்த நிலையில், குரூப் 2 முதன்மைத் தேர்வுகளுக்கான முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை www.tnpsc.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து