முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிசோரம் முழு கல்வியறிவு பெற்ற முதல் மாநிலமானது : முதல்வர் லால்துஹோமா அறிவிப்பு

புதன்கிழமை, 21 மே 2025      இந்தியா
School 2024 11 20

Source: provided

ஐஸ்வால் : 'உல்லாஸ்' முன்முயற்சியின் கீழ் மிசோரம் அதிகாரபூர்வமாக முழு கல்வியறிவு பெற்ற முதல் மாநிலமாக மாறியுள்ளது என்று அம்மாநில முதல்வர் லால்துஹோமா அறிவித்துள்ளார்.

மிசோரம் பல்கலைக்கழக ஆடிட்டோரியத்தில் மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை இணையமைச்சர் ஜெயந்த் சவுத்ரி மற்றும் மிசோரம் கல்வி அமைச்சர் டாக்டர் வன்லால்த்லானா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் இந்த அறிவிப்பை வெளியிட்ட மிசோரம் முதல்வர் லால்துஹோமா, "இன்று நமது மாநிலத்தின் பயணத்தில் ஒரு வரலாற்று தருணத்தைக் குறிக்கிறது. நமது மக்களின் கூட்டு விருப்பம், ஒழுக்கம் மற்றும் தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கும் ஒரு மாற்றத்திற்கான மைல்கல் இது.

உல்லாஸ் தரநிலைகளின்படி 95% கல்வியறிவு விகிதத்தை தாண்டியுள்ளோம். இதனால் மிசோரம் முழு கல்வியறிவு பெற்ற மாநிலமாக மாறியுள்ளது. நாங்கள் 98.2% கல்வியறிவு விகிதத்தை அடைந்துள்ளோம். மிசோரம் கல்வியறிவு தரவரிசையில் முதலிடத்தில் இருப்பதை உறுதி செய்வதற்காக எங்கள் கல்வி அமைச்சர் டாக்டர் வன்லால்த்லானா, ஒப்பந்த அடிப்படையில் 292 கல்வியாளர்களை நியமித்தார். இந்த சாதனை முடிவு அல்ல, புதிய தொடக்கம். இந்த நாளை ஒரு பிரச்சாரத்தின் முடிவாக அல்ல, ஒரு புதிய சகாப்தத்தின் விடியலாக நாங்கள் கொண்டாடுகிறோம். இனி ஒவ்வொரு மிசோரம் மக்களும் டிஜிட்டல் கல்வியறிவு, நிதி கல்வியறிவு மற்றும் தொழில்முனைவோர் திறன்களை மேம்படுத்துவதில் உயர்ந்த இலக்கை அடைவோம். நாம் நாட்டில் முதலிடத்தில் இருப்பதில் பெருமைப்படுகிறோம் என்றார்.

இந்த விழாவில் மத்திய அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி மிசோரம் மக்களை வாழ்த்தினார். மேலும், இந்த சாதனைக்கு பங்களித்த அனைவரின் அர்ப்பணிப்பையும் பாராட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து