முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். 62-வது லீக் ஆட்டம்: சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்

புதன்கிழமை, 21 மே 2025      விளையாட்டு
Rajasthan-team 2024-03-29

Source: provided

புதுடெல்லி : ஐ.பி.எல். 62-வது லீக் ஆட்டத்தில் சென்னையை வீழ்த்தி ராஜஸ்தான் அணி ஆறுதல் வெற்றியை பெற்றது.

பந்துவீச்சு தேர்வு...

டெல்லியில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் 62-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 187 ரன்கள் எடுத்தது. ஆயுஷ் மாத்ரே அதிரடியாக விளையாடி 20 பந்தில் 43 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். பிரேவிஸ் 42 ரன்னில் வெளியேறினார். ஷிவம் துபே 39 ரன்னில் அவுட் ஆனார்.

188 ரன்கள் எடுத்து... 

ராஜஸ்தான் சார்பில் யுத்வீர் சிங் சரக், மத்வால் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் களமிறங்கியது. ஜெய்ஸ்வால் 19 பந்தில் 33 ரன் எடுத்து அவுட்டானார். அதிரடியாக ஆடிய சூர்யவன்ஷி 33 பந்தில் 57 ரன்னும், சஞ்சு சாம்சன் 41 ரன்னும் எடுத்து வெளியேறினர். கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய ஜுரெல் 12 பந்தில் 31 ரன் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இறுதியில் ராஜஸ்தான் 17.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இது ராஜஸ்தான் பெற்ற 4வது வெற்றி ஆகும்.

மோசமான சாதனை....

இந்நிலையில், 2022ம் ஆண்டுக்குப் பிறகு நடப்பு சீசனிலும் அதிகபட்சமாக 10 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை சந்தித்துள்ளது நடப்பி ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடியுள்ள சி.எஸ்.கே. அணி 10 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. சி.எஸ்.கே. அணி தனது கடைசி போட்டியில் (மே 25) குஜராத்தை எதிர்கொள்கிறது.

சி.எஸ்.கே.வின் அதிக தோல்விகள்:

1) 2022 - 10 தோல்விகள்.

2) 2025 - 10* தோல்விகள்.

3) 2012 - 8 தோல்விகள்.

4) 2020 - 8 தோல்விகள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து