முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழத்திற்கு வரவேண்டிய செமிகண்டக்டர் தொழிற்சாலை உ.பி.க்கு இடம் மாற்றம்: ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 24 மே 2025      தமிழகம்
OPS 2023-10-25

சென்னை, தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய  செமி கண்டக்டர் தொழிற்சாலை உத்தரபிரதேசத்திற்கு சென்று விட்டது பேரதீர்ச்சி அளிப்பதாக ஒ.பி.எஸ். கூறியுள்ளார். இது குறித்து அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2025-2026-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு செமி கண்டக்டர் இயக்கம் எனும்ஐந்தாண்டுத் திட்டம் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்றும், உலக அளவில் தலைசிறந்தசெமி கண்டக்டர் வடிவமைப்பு நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டுப் புத்தொழில் நிறுவனங்கள் தங்கள் வடிவமைப்புமையங்களை தமிழ்நாட்டில் அமைத்திட ஊக்கம் அளிக்கப்படும் என்றும், கோவை சூலூர் மற்றும் பல்லடம் பகுதிகளில்\தலா நூறு ஏக்கர் பரப்பளவில் செமி கண்டக்டர் உற்பத்திக்கான இயந்திரத் தொழிற் பூங்காக்கள் உருவாக்கப்படும்என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய செமி கண்டக்டர் தொழிற்சாலை உத்தரப் பிரதேசத்திற்குசென்றுவிட்டது என்பது பேரதிர்ச்சியை அளிக்கிறது. இதன் விளைவாக, அரசாங்கத்திற்கு வர வேண்டிய வருவாய்மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினை தமிழகம் இழந்திருக்கிறது.தொழில்கள் வளர வேண்டும், தொழிலாளர்கள் வாழ வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, அடுத்த செமிகண்டக்டர் தொழிற்சாலையை தமிழ்நாட்டில் அமைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும், புதிய முதலீடுகளை ஈர்க்கவும்,அதன்மூலம் வேலைவாய்ப்பினை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து