முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவகாசியில் வீட்டில் வைத்திருந்த தீப்பெட்டி மூலப் பொருளில் தீ விபத்து

சனிக்கிழமை, 24 மே 2025      தமிழகம்
Sivakasi-fire-2025-05-24

 விருதுநகர், சிவகாசி பேருந்து நிலையத்திற்கு அடுத்துள்ள கட்டிடங்களில் பிரபல தொழில் நிறுவனத்திற்கு சொந்தமான தீப்பெட்டி மற்றும் அச்சகத் தொழிற்சாலை முன்பு செயல்பட்டு வந்தது. அந்த இடத்தை வேறொரு தரப்பு விலைக்கு வாங்கியுள்ள பட்சத்தில், முன்பிருந்த தீப்பெட்டி தொழிற்சாலையின் மீதமுள்ள தீக்குச்சிகளும், தீப்பெட்டி உற்பத்தி செய்ய தேவையான சில மூலப் பொருட்களும் பாழடைந்த கட்டிடத்தின் இருப்பு வைக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. 

அந்த மூலப் பொருள்களில் உராய்வு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டு மளமள பற்றி எரிந்த தீ  அடர்த்தியான கரும் புகையுடன் கட்டிடத்திலிருந்து வெளியேறியது. வெளியேறிய கரும்புகை பேருந்து நிலைய சாலை வளாகம் முழுவதும் பரவியதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துடன் அச்சமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு 2- தீயணைப்பு வாகனங்களில்  வந்த தீயணைப்பு வீரர்கள்  தண்ணீரை பீச்சி யடித்து தீயையும், கரும்புகையையும் அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து சம்பவம் பற்றி சிவகாசி கிழக்கு பகுதி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்து சம்பவத்தால்  சிவகாசி பேருந்து நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து