முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் உணர்வை பாகிஸ்தான் மீறியுள்ளது: இந்தியா வாதம்

சனிக்கிழமை, 24 மே 2025      உலகம்
UN-India-2025-05-24

நியூயார்க்,  இந்தியா மீது நடத்தியதன் மூலம் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் உணர்வை பாகிஸ்தான் மீறியுள்ளது என்று ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் கூறினார்.

ஸ்லோவேனியாவில் 'ஆயுத மோதலில் தண்ணீரைப் பாதுகாத்தல் - பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாத்தல்' என்ற தலைப்பில் நடந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் ஆற்றிய உரையில், “ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று நடந்த கொடூரமான தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, 1960-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்தது.

ஒரு மேல் நதி நீர் நாடாக இந்தியா எப்போதும் பொறுப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. இந்தியா 65 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் நல்லெண்ணத்துடன் நுழைந்தது. ஆனால், இந்தியா மீது மூன்று போர்களையும் ஆயிரக்கணக்கான பயங்கரவாதத் தாக்குதல்களையும் நடத்துவதன் மூலம் பாகிஸ்தான் ஒப்பந்தத்தின் உணர்வை மீறியுள்ளது.

 கடந்த 40 ஆண்டுகளில், பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் உட்பட பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களில் 20,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.  கடந்த இரண்டு ஆண்டுகளில் பல சந்தர்ப்பங்களில் ஒப்பந்தத்தின் மாற்றங்கள் குறித்து விவாதிக்குமாறு பாகிஸ்தானிடம் இந்தியா முறையாகக் கேட்டுக் கொண்டுள்ளது, ஆனால் அந்நாடு தொடர்ந்து இவற்றை நிராகரித்து வருகிறது.  

இந்தப் பின்னணியில் தான், பயங்கரவாதத்தின் உலகளாவிய மையமாக இருக்கும் பாகிஸ்தான், எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கான அதன் ஆதரவை நம்பகத்தன்மையுடனும், மாற்ற முடியாத வகையிலும் முடிவுக்குக் கொண்டுவரும் வரை ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும் என்று இந்தியா இறுதியாக அறிவித்துள்ளது. இதன்மூலம் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீறுவது பாகிஸ்தான்தான் என்பது தெளிவாகிறது.” என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து