முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபு மற்றும் வெற்றி இணையும் ராஜபுத்திரன்

புதன்கிழமை, 28 மே 2025      சினிமா
Rajaputran- 2025-05-28

Source: provided

கிரசென்ட் சினி கிரியேஷன்ஸ் சார்பில் கே. எம் .சபி தயாரிக்க, இளைய திலகம் பிரபுவும் வெற்றியும் தந்தை மகனாக நடிக்க, நாயகியாக கிருஷ்ண பிரியா நடிக்கும் படம் ராஜபுத்திரன் . கோமல் குமார், மன்சூர் அலிகான், இமான் அண்ணாச்சி, ஆர். வி .உதயகுமார் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராஜ புத்திரன்’.

.ஆலிவர் டெனி ஒளிப்பதிவு செய்துள்ளார் . மவுஃபுல் ராஜா இசையமைத்ததுள்ளார். பாடல்களை வைரமுத்து மற்றும் மோகன் ராஜன் எழுதியுள்ளனர். மே மாதம் 30 ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினருடன் கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். படம் பற்றி பேசிய இயக்குனர் மகா கந்தன், சின்னத்தம்பி படத்தில் பிரபு நடித்த கதாபாத்திரம் போல் ராஜபுத்திரன் படத்தில் அவரது கதாபாத்திரம் இருக்கும், அனைத்து தரப்பினருக்கும் குறிப்பாக பெண்களுக்கு இப்படம் பிடிக்கும் விதமாக அமைந்திருக்கிறது என்றார். 

இது முழுக்க ஒரு குடும்பப்படமாகவே உருவாகி இருக்கிறது அத்துடன் காதலும் இருக்கிறது என்றார். பின்னர் இளைய திலகம் பிரபு பேசும்போது..“இதுவரை நான் 74 புதுமுக இயக்குனர்களை அறிமுகப்படுத்தி இருக்கேன் . இந்தப் படமும் அதில் ஒன்று. இந்தப் படத்தில் நிறைய இளைஞர்களுடன் பணியாற்றினேன். எல்லோரும் அற்புதமான நடிகர்கள்; நல்ல டெக்னீசியன்கள்.. இந்தப் படத்தில் அண்ணன் டி.ராஜேந்தர் பாடிய எனர்ஜியான பாடல் ஒன்றுக்கு நான் ஆடி இருக்கிறேன். ஆரம்பத்தில் நான் ஆட விரும்பவில்லை. ஆனால் வற்புறுத்தி ஆட வைத்து விட்டார்கள் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து