முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய டெஸ்ட் அணியில் ஸ்ரேயஸ் அய்யர் தேர்வாகாதது குறித்து கம்பீர் மழுப்பல் பதில்

வியாழக்கிழமை, 29 மே 2025      விளையாட்டு
shreyas

Source: provided

மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயஸ் அய்யரை தேர்வு செய்யாமல் விட்டது  குறித்து அணி பயிற்சியாளர்  கம்பீர் மழுப்பல் பதில் அளித்துள்ளார்.

பலத்த ஐயம்...

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயஸ் அய்யர் புறக்கணிக்கப் பட்டுள்ளார். கேப்டன்கள், சீனியர்கள் இல்லாத இந்திய  அணியில் கேப்டனாகவே கூட ஸ்ரேயஸ் அய்யரை தேர்வு செய்திருக்க வேண்டும். ஆனால், அணியிலேயே இல்லை என்பது பெரிய ஆச்சரியம் என்பதோடு கவுதம் கம்பீர் மீது பலத்த ஐயங்களை எழுப்பக் கூடியதே.

நான் செலக்டர் அல்ல...

 ஸ்ரேயஸ் அய்யரை ஏன் தேர்வு செய்யவில்லை என்று கேட்டதற்கு ‘நான் செலக்டர் அல்ல’ என்று ஒற்றை வரியில் அதைப் புறக்கணிக்கிறார் கம்பீர் என்றால் நிச்சயம் குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்ற முதுமொழிக்கேற்ப ஸ்ரேயஸ் அய்யர் தேர்வில் இவரது கையும் இருக்கிறது என்பதே நம் வாசிப்பு.

பெரிய போர்ஸ் ஆக...

ஸ்ரேயஸ் அய்யர் உள்நாட்டுக் கிரிக்கெடிலும் அசத்தி வருகிறார். தற்போது ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி ரிக்கி பாண்டிங் பயிற்சியின் கீழ் அவரது கைவண்ணத்தில் பட்டைத்தீட்டப்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர் கேப்டன்சியில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு பெரிய  போர்ஸ் ஆக வந்து நின்றுள்ளது. கடந்த பிப்ரவரி 2024-ல் அய்யர் கடைசியாக டெஸ்ட் போட்டியில் ஆடினார். அதன் பிறகே சாம்பியன்ஸ் டிராபியிலும் ஸ்ரேயஸ் அய்யர் அபாரமாக ஆடி 5 போட்டிகளில் 243 ரன்களை எடுத்தார். ரஞ்சி சீசனில் 7 இன்னிங்ஸ்களில் 480 ரன்களை எடுத்தார்.

அதிருப்தி... 

தற்போது ஐ.பி.எல். தொடரில் 14 போட்டிகளில் 514 ரன்களை 171.90 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார். சராசரி 51.40. சாம்பியன்ஸ் டிராபி அணியிலேயே கம்பீர், அய்யரைத் தேர்வு செய்தது குறித்து அதிருப்தி வெளியிட்டதாக செய்திகள் வெளியாகின, இப்போது இது. ஸ்ரேயஸ் அய்யர் மீது கம்பீருக்கு என்ன காண்டு என்று தெரியவில்லை.

பேவரிட்டிசம்...

சாய் சுதர்ஷனுக்கு இடம் இருக்கிறது ஆனால் பிரமாதமாக ஆடி வரும் கேப்டன்சி வீரர் ஸ்ரேயஸ் அய்யருக்கு இடமில்லை என்று அகார்க்கரும் தெரிவித்திருப்பது, வேறு ஏதோ நடக்கிறது என்ற ஐயத்தைத்தான் எழுப்புகிறது, கம்பீர் சொல்வது போல் ஆட்டத்திறன்,  பார்ம் போன்றவை தேர்வில் தவிர்க்கப்படுகிறது போலும். அதை விடுத்து சொந்த எண்ணங்களும் பேவரிட்டிசமும் அணித்தேர்வில் இடம்பிடித்துள்ளது போலும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து