முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெற்றி கொண்டாட்டத்தில் 11 பேர் பலி: மக்களிடம் மன்னிப்பு கோரினார் கர்நாடக மாநில துணை முதல்வர்

புதன்கிழமை, 4 ஜூன் 2025      விளையாட்டு
TK-Sivakumar

Source: provided

பெங்களூரு: பெங்களூரு அணி வெற்றி கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிந்த சம்பவத்திற்கு கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மன்னிப்பு கோரியுள்ளார்.

நீண்ட கால ஏக்கம்... 

18-வது ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்.சி.பி. இறுதிப் போட்டியை வென்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணியின் நீண்ட கால ஏக்கம் தீர்ந்துள்ளது.இதனை கொண்டாட பெங்களூருவில் ஏற்பாடு செய்யப்பட்டது.

பாராட்டு விழா...

அதன்படி பெங்களூரு அணி வீரர்களுக்கு , கர்நாடக முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் தலைமையில் பாராட்டு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.சின்னசாமி மைதானத்தில் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற இருந்த நிலையில் , பெங்களூரு அணியை வரவேற்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். இந்நிலையில் வீரர்கள் வரும்வரை பொறுமையாக இருக்காமல் ஸ்டேடியத்தின் சுவர்கள் மற்றும் வேலிகளில் ரசிகர்கள் ஏறிச் செல்ல தொடங்கினர்.

மன்னிக்கவும்....

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினார். 50 மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவத்துக்கு கர்நாடக முதல்வர், துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மன்னிப்பு கோரியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, ஆர்.சி.பி. வெற்றிக் கொண்டாட்டத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை; பெங்களூரு மற்றும் கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் கூட்ட நெரிசல் ஏற்படும் என்றுதான் திறந்தவெளி வாகன உலாவை ரத்து செய்தோம். 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கூட்டத்தை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு தர வேண்டும். என தெரிவித்துள்ளார் .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து