முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்: நதியில் மூழ்கி 8 இளைஞர்கள் பலி

செவ்வாய்க்கிழமை, 10 ஜூன் 2025      இந்தியா
Suicide 2023 04 29

Source: provided

பரத்பூர்: ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டத்தில் உள்ள பனாஸ் ஆற்றில் ஜெய்ப்பூரைச் சேர்ந்த 8 இளைஞர்கள் மூழ்கி இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் மேலும் 3 பேர் மீட்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

25 முதல் 32 வயதுக்குட்பட்டவர்கள் என்று நம்பப்படும் 11 பேர் கொண்ட குழு, ஒரு நண்பரின் பிறந்தநாளைக் கொண்டாட டோங்கிற்கு வந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சிலர் நீந்துவதற்காக ஆற்றில் இறங்கினர். அப்போது தீடீரன நீரில் மூழ்கத் தொடங்கியபோது மற்ற நண்பர்கள் அவர்களுக்கு உதவ முயன்றதாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து அவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து உள்ளூர்வாசிகள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து கூட்டு மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பேசிய டோங்க் காவல் கண்காணிப்பாளர் விகாஸ் சங்வான், "இளைஞர்கள் நீரில் மூழ்கிய சம்பவத்தில் 8 பேர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 

இறந்தவர்கள் ஹசன்புராவைச் சேர்ந்த நவுஷாத் கான், ருசிம் கான் மற்றும் பர்ஹான் கான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அனைவரும் காட் கேட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன. அவர்களின் குடும்பத்தினருக்கும் ஜெய்ப்பூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பிரேத பரிசோதனைக்குப் பிறகு உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து