Idhayam Matrimony

நடுவரின் முடிவு மீது அதிருப்தி: கோபத்தில் பந்தை தூக்கி எறிந்த பண்ட்

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜூன் 2025      விளையாட்டு
Rishabh

Source: provided

லீட்ஸ்: நடுவரின் முடிவு மீதான அதிருப்தியால்  கோபத்தில் பண்ட் பந்தை தூக்கி எறிந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி உள்ளது.

முதலாவது டெஸ்ட்...

இங்கிலாந்துக்கு சென்றுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில்  தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

471 ரன்கள் குவிப்பு...

அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவர்களில் 471 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் ஜெய்ஸ்வால் (101 ரன்கள்), கில் (147 ரன்கள்) மற்றும் ரிஷப் பண்ட் (134 ரன்கள்) சதம் விளாசினர். இங்கிலாந்து அணி தரப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஜோஷ் டாங்கு தலா 4 விக்கெட் சாய்த்தனர். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுக்கு 209 ரன்கள் எடுத்தது. ஆலி போப் 100 ரன்களுடனும் ஹாரி புரூக் ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனர். இந்திய தரப்பில் பும்ரா மட்டுமே 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார்.

கோரிக்கை....

இந்த சூழலில் 3-வது நாள் ஆட்டம் நேற்று  நடைபெற்றது. நேற்றைய ஆட்டம் தொடங்கிய 12-15 ஓவர்களிலேயே பந்தின் தன்மை மாறிவிட்டது. வேறு புதிய பந்தை தரும்படி நடுவர்களிடம் அடிக்கடி முறையிட்டனர். இருப்பினும் நடுவர்கள் இந்திய அணியினரின் கோரிக்கைகளை நிராகரித்தார்.

தூக்கி எறிந்து... 

ஒரு கட்டத்தில் இந்திய அணியின் துணை கேப்டனான ரிஷப் பண்ட் நடுவரிடம் நேரடியாக சென்று பந்தின் தன்மையை குறிப்பிட்டு காட்டி முறையிட்டார். ஆனாலும் நடுவர் அதனை கண்டுகொள்ளவில்லை. இதனால் அதிருப்தியடைந்த பண்ட் பந்தை வேகமாக தூக்கி எறிந்து விட்டு சென்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து