முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டில் எப்போதும் சிங்கள் என்ஜின் தான்: அமைச்சர் ரகுபதி பேட்டி

திங்கட்கிழமை, 23 ஜூன் 2025      தமிழகம்
Raghupathi 1

புதுக்கோட்டை,  தமிழ்நாட்டில் எப்போதும் சிங்கள் என்ஜின் தான். ஒரே இயக்குபவர் தான்  என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்a. 

அப்போது அவர் கூறியதாவது: திராவிடத்திற்கு எதிரான மாநாட்டில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றது வெட்கக்கேடானது. இந்து சமய அறநிலையத்துறை இல்லை என்றால் தமிழ்நாட்டில் ஆலயங்களே இருந்திருக்காது. இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். சிறுபான்மையினருக்கு தான் பாதுகாப்பு தேவை.

முருகனை தமிழ்நாட்டை விட்டு கடத்திச்செல்ல முடியாது அவர் நம்மோடு தான் இருப்பார். யார் தமிழ்நாட்டை ஆண்டால் பாதுகாப்பு என தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு தெரியும். தமிழ்நாட்டு வாக்காளர்களிடம் போலி வேடம் எடுபடாது. அ.தி.மு.க. என்று பெயர் வைத்துக்கொள்ளவே தகுதியற்றவர்களாக ஆகி விட்டார்கள்.

திராவிடத்தை வீழ்த்துவோம் என்று சொல்லி தான் இந்த முருகன் மாநாட்டை நடத்தி இருக்கிறார்கள். அவர்கள் கட்சியின் பெயரிலேயே திராவிடம் இருப்பதை எடப்பாடி பழனிசாமி மறந்து விட்டார். மற்றவர்களும் இன்றைக்கு மறந்துவிட்டு பா.ஜ.க.வின் கொத்தடிமைகள் நாங்கள் என்பதை நிருபித்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு கிடைத்து இருக்கும் அருமையான அடிமைகள் அவர்கள்.

இங்கு எந்த ஒரு மத கலாச்சாரத்திற்கு நாங்கள் இங்கு இடம் கொடுக்க மாட்டோம்.   இங்கே எப்போதும் சிங்கள் என்ஜின் தான். ஒரே இயக்குபவர் தான் எங்கள் தலைவர் தளபதி தான். எங்கள் தோழமை கட்சிகள் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. சுற்றுச்சூழல் அனுமதி பெற்று விரைவில் சட்டப்படி மணல் குவாரிகள் திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து