Idhayam Matrimony

4 ஆண்டுகளுக்கு பிறகு 2-வது டெஸ்ட் போட்டியில் களமிறங்குகிறார் ஆர்ச்சர்..?

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜூன் 2025      விளையாட்டு
Cricket

Source: provided

லண்டன்: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜோப்ரா ஆர்ச்சர் களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பின்னடைவு...

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 471 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. இந்தப் போட்டியின் முதல் நாளில் இந்திய அணி சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷுப்மன் கில் இருவரும் முதல் நாளில் சதம் விளாசினர். பந்துவீச்சில் இந்திய அணிக்கு இங்கிலாந்து சவாலளிக்கத் தவறியது. அந்த அணியில் வேகப் பந்துவீச்சாளர்கள் ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் மார்க் வுட் இல்லாதது பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது.

களமிறங்குவாரா...?

இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் கவுன்ட்டி போட்டியில் விளையாடவுள்ளதால், இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் அவர் சேர்க்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக வெளியான தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஜோப்ரா ஆர்ச்சர் கவுன்ட்டி போட்டிகள் மூலம், மீண்டும் சிவப்புப் பந்து போட்டிகளில் விளையாடவுள்ளார். இந்தப் போட்டியில் எந்த ஒரு அசௌகரியமுமின்றி அவர் பந்துவீச்சில் ஈடுபடும் பட்சத்தில், இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் அவர் சேர்க்கப்படலாம். பிளேயிங் லெவனில் அவர் விளையாடுவதற்கான வாய்ப்பு அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயம் காரணமாக...

நடப்பு ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ஜோப்ரா ஆர்ச்சர், கடந்த நான்கு ஆண்டுகளாக காயம் காரணமாக முதல் தர கிரிக்கெட்டில் விளையாடாதது குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற ஜூலை 2 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து