Idhayam Matrimony

டி.என்.ஏ. திரை விமர்சனம்

திங்கட்கிழமை, 23 ஜூன் 2025      சினிமா
DNA-Review 2025-06-23

Source: provided

அதர்வா மனைவி நிமிஷா சஜயனுக்கு பிறக்கும் குழந்தை சில நிமிடங்களில் மாற்றப்பட்டு கடத்தப்படுகிறது. ஆனால், மருத்துவமனை நிர்வாகம் குழந்தை கடத்தப்படவில்லை என்கிறது. ஆனால், நிமிஷா மட்டும் தனது குழந்தை இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். மனைவி சொல்வதன் பின்னணியை கண்டுபிடிக்க களத்தில் இறங்கும் அதர்வா, குழந்தையை மீட்டாரா? குழந்தை கடத்தலின் பின்னணி என்ன? என்பது தான் மீதிக்கதை. காதல் தோல்வியால் போதைக்கு அடியாகி, பிறகு பொறுப்பான கணவராக தனது கதாபாத்திரத்தை அதர்வா சிறப்பாக கையாண்டிருக்கிறார். கதாநாயகியாக நடித்திருக்கும் நிமிஷா சஜயன், கண்களினாலேயே நடித்திருக்கிறார். குழந்தையை பறி கொடுத்துவிட்டு பறிதவிக்கும் காட்சிகளில் மிரட்டலாக நடித்திருக்கிறார். இசையமைப்பாளர்கள் சத்யபிரகாஷ், ஸ்ரீகாந்த் ஹரிஹரன், பிரவின் சைவி, சஹி சிவா, அனல் ஆகாஷ் ஆகியோரது பாடல்களும், ஜிப்ரானின் பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. குழந்தை கடத்தல் கதையை வித்தியாசமாண கோணத்தில் அணுகியிருக்கும் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன், போலீஸ் விசாரணை, குழந்தை கடத்தல் நெட்வொர்க் போன்றவற்றை இன்னும் சுவாரஸ்யமாக சொல்லியிருந்தால் படம் பேசப்பட்டு இருக்கும். மொத்தத்தில் டிஎன்ஏ ஒரு சுமார் ரகமே.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து