Idhayam Matrimony

சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் விமர்சனம்

திங்கட்கிழமை, 23 ஜூன் 2025      சினிமா
Chennai-City-Gangsters-Revi

Source: provided

திருட்டு தொழில் செய்யும் நாயகன் வைபவ் மற்றும் அவரது நண்பர் மணிகண்ட ராஜேஷ், இருவரையும் 2 கோடி பணத்திற்காக தாதா சிஹான் ஹூசைனி துரத்துகிறார். அவரிடம் இருந்து தப்பிப்பதற்காக ஆனந்தராஜ், ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன் மற்றும் சுனில் ரெட்டி ஆகியோரிடம் தஞ்சம் அடையும் வைபவ், அவர்களுடன் சேர்ந்து வங்கி ஒன்றை கொள்ளையடிக்க திட்டம் போடுகிறார். இவர்களின் திட்டம் வெற்றி பெற்றதா? வைபவ் தாதாவிடம் இருந்து தப்பித்தாரா என்பதை நகைச்சுவையாக சொல்லும் படமே சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’. காமெடி கதாபாத்திரத்திரங்களை எளிமையாக கையாளும் வைபவ், வசன உச்சரிப்பு, உடல் மொழி மூலம் சிரிக்க வைக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் அதுல்யா ரவிக்கு பெரிய வேலை இல்லை என்றாலும் ஒரு சில காட்சிகளில் தலை காட்டுகிறார். டி.இமானின் இசையில் பாடல்கள் ஓகே ரகம். முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதால் லாஜிக்கை தவிர்த்து படத்தைப் பார்க்கலாம். எழுதி இயக்கியிருக்கும் விக்ரம் ராஜேஸ்வர், பழைய கதையை காமெடியாக சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆனாலும் சிறப்பாக சொல்லியிருந்தால் படம் மக்கள் மனதில் நின்றிருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து