Idhayam Matrimony

தாம்பரத்தில் ரயிலை ஓட்டிச் செல்ல முயன்ற வடமாநில வாலிபரால் பரபரப்பு

திங்கட்கிழமை, 23 ஜூன் 2025      தமிழகம்
Train 2023-04-06

சென்னை, தாம்பரத்தில் ரயிலை ஓட்டிச் செல்ல முயன்ற வடமாநில வாலிபரால் பரபரப்பு நிலவியது.

சென்னை தாம்பரம், கடற்கரை இடையே புறநகர் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கான முறை புறநகர் ரயில்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தாம்பரம் ரயில்வே பணிமனை அருகே தண்டவாளத்தில் நேற்று மின்சார ரயில் நிறுத்தப்பட்டிருந்தது. அப்பகுதிக்கு  மது, கஞ்சா குடித்துவிட்டு போதையில் வந்த வடமாநில இளைஞன், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புறநகர் ரயிலை ஓட்டிச் செல்ல முயன்றான். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப்படையினர் வடமாநில இளைஞனை சுற்று வளைத்து பிடித்தனர். மேலும், ரயிலை ஓட்டிச் செல்ல மேற்கொண்ட முயற்சியையும் தடுத்து நிறுத்தினர்.

மது, கஞ்சா போதையில் இருந்த வடமாநில இளைஞன் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் சில வடமாநில இளைஞர்களையும் ரயில்வே பாதுகாப்புப்படையினர் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட வடமாநில இளைஞரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து