முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்: இங்கி.க்கு பதிலடி கொடுக்குமா இந்தியா?

செவ்வாய்க்கிழமை, 1 ஜூலை 2025      விளையாட்டு
INDIA 2024-12-04

Source: provided

பர்மிங்காம் : 2-வது டெஸ்ட் இன்று தொடங்கவுள்ள நிலைியல் வெற்றியே பெறாத மைதானத்தில் இங்கிலாந்துக்கு  பதிலடி கொடுக்குமா இந்திய அணி?  என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் பர்மிங்காமில் இந்திய அணி வெற்றி பெற்றது இல்லை என்ற வரலாற்றைய மாற்றுமா இந்திய அணி என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

சுற்றுப்பயணம்... 

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் லீட்சில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இதனால் 0-1 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் இன்று (2-ந்தேதி) தொடங்குகிறது.

மிகவும் சவால்...

லீட்ஸ் டெஸ்டில் 5 சதம் அடித்தும், 835 ரன் குவித்தும் (முதல் இன்னிங்ஸ் 471 + 2-வது இன்னிங்ஸ் 364) இந்தியா தோற்றது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. இந்த தோல்விக்கு இந்திய அணி பதிலடி கொடுக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது மிகவும் சவாலானது. மேலும் பர்மிங்காமில் இந்திய அணி வெற்றி பெற்றது இல்லை. இங்கு ஆடிய 7 டெஸ்டில் 6-ல் தோற்றது. ஒரு போட்டி டிரா ஆனது.

மாற்றம் இருக்கும்...

2-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அதிரடியான மாற்றம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சு தான் சொதப்பலாக இருந்தது. பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாகூர், ஜடேஜா ஆகியோரது பந்து வீச்சு ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. பேட்டிங்கில் சாய் சுதர்சன், கருண் நாயர் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதனால் குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஆகாஷ் தீப், நிதீஷ்குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் வாய்ப்பில் இருக்கிறார்கள். 

பும்ரா ஆடுவாரா? 

வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆடுவாரா? என்பது கடைசி நிமிடங்களில் தான் தெரியும். முதல் டெஸ்டில் 2 சதம் விளாசிய ரிஷப்பண்ட், ஜெய்ஸ்வால், கேப்டன் சுப்மன் கில், கே.எஸ்.ராகுல் 2-வது போட்டியிலும் தங்களது திறமையை வெளிப்படுத்துவது அவசியமாகும். மேலும் கடைசி கட்ட வீரர் கள் சிறப்பாக ஆடுவது முக்கியமானதாகும்.

மாற்றமில்லை.... 

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி அதிரடியான ஆட்டத்தை வியூகமாக அமைத்துள்ளது. அதே நிலையை இந்த டெஸ்டிலும் கடைபிடிக்கும். 2-வது போட்டிக்கான அந்த அணியில் மாற்றமில்லை. ஆர்ச்சர் இடம் பெற்றாலும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் டக்கெட், அலி போப், ஹேரி புரூக், ஜோரூட், ஜேமி சுமித் ஆகியோரும் பந்துவீச்சில் ஜோஷ்டங், கேப்டன் பென் ஸ்டோக்ஸ், கார்ஸ் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். இன்றையை டெஸ்ட் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. சோனி டென் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

வரலாறு படைக்குமா..?

பர்மிங்காம் மைதானத்தில் இதுவரை எந்த ஆசிய அணியும் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றதில்லை. இந்திய அணி இங்கு 8 போட்டிகளில் ஆடி 7-ல் தோல்வியும் ஒன்றில் டிராவும் கண்டுள்ளது. பாகிஸ்தானும் 8 போட்டிகளில் விளையாடி 5 தோல்வி, 3 டிரா கண்டுள்ளது. இலங்கை 2 போட்டிகளில் ஆடி இரண்டிலும் தோல்வியை கண்டுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்று பர்மிங்காம் மைதானத்தில் வெற்றி பெற்ற முதல் ஆசிய அணியாக வரலாறு படைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து