முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரேசிலுக்கு 50 சதவீத வரி: ட்ரம்ப் முடிவுக்கு அதிபர் லூலா டி சில்வா எதிர்ப்பு

வியாழக்கிழமை, 10 ஜூலை 2025      உலகம்
Trump

வாஷிங்டன், பிரேசில் நாட்டுக்கு 50% வரி விதிப்பதாகவும், இலங்கை, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 7 நாடுகளுக்கு 30 சதவீதம் வரை வரி விதிக்கப்படுவதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து 8 நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிகாரபூர்வ கடிதங்கள் எழுதியுள்ளார். இந்த நாடுகள் மீதான அனைத்து புதிய வரிகளும் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதன்படி பிரேசில் நாட்டுக்கு 50 சதவீதம் வரி விதிப்பதாக அறிவித்துள்ளார். மேலும், அல்ஜீரியா, ஈராக், லிபியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு 30% வரியும்; புருனே மற்றும் மால்டோவா நாடுகள் மீது 25% வரியும்; பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு 20% வரியும் விதிக்கப்படுவதாக ட்ரம்ப் அறிவித்தார்.

‘நியாயமற்ற வர்த்தக ஏற்றத்தாழ்வுகளை’ சரிசெய்யும் முயற்சியாக இந்த வரிவிதிப்பு இருக்கும் என ட்ரம்ப் தெரிவித்தார். பிரேசில் நாட்டின் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ மீது வழக்குத் தொடரப்பட்டதற்கு பதிலடியாக, அந்நாட்டின் மீது 50% வரி விதிக்கப்பட்டதாக அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லூலாவின் எதிர்வினை: ட்ரம்பின் 50 சதவீத வரிவிதிப்பு குறித்து லூலா டி சில்வா வெளியிட்ட எக்ஸ் பதிவில், “பிரேசில் இறையாண்மை கொண்ட நாடு,  எனவே நாங்கள் வெளியில் இருந்து வரும் எந்தவொரு அச்சுறுத்தலையும் ஏற்கமாட்டோம். அமெரிக்கா எங்கள் மீது புதிய வரிகளை விதித்தால், பிரேசில் அதற்கான பதிலடியை பிரேசிலின் பொருளாதார சட்டம் மூலம் கொடுக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து