முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெருந்தலைவர் காமராஜர் விவகாரம்: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் செல்வப்பெருந்தகை சந்திப்பு

வெள்ளிக்கிழமை, 18 ஜூலை 2025      தமிழகம்
Selvaperundhai 2024-04-19

Source: provided

சென்னை : காமராஜர் விவகாரம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முதல்வர்  மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்து பேசினார்.

கர்மவீரர் காமராஜரை பற்றி பேசுவதற்கு தி.மு.க.விற்கு அருகதை இல்லை. வரலாற்றை மாற்றி, திரித்து ஆளும் தி.மு.க., கர்மவீரர் காமராஜரை கேவலப்படுத்தி உள்ளனர். இதை கண்டிக்கிறேன். இதற்காக காங்கிரஸ் தலைவரின் வெறும் கண்டன அறிக்கை மட்டும் போதுமா?. உண்மையாகவே காமராஜர் ஆட்சி வேண்டுமென்று பேசும் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியே வரத் தயாரா? குறைந்தபட்சம் மானத்தை காப்பாற்ற தனித்துப்போட்டியிடத் தயாரா?. தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என விமர்சித்தவர் காமராஜர் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முதல்வர்  மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினார். முதல்வர்  சந்தித்தப்பின் காமராஜர் விவகாரம் மற்றும் அண்ணாமலை தெரிவித்த கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு செல்வப்பெருந்தகை பதில் அளித்து கூறியதாவது:- காமராஜர் விவகாரம் முடிந்து போன விசயம். நேற்றே முற்றுப்புள்ளி வைச்சாச்சு. ஆடு நனைகிறது என்று ஓநாய் கண்ணீர் விடுமாம். அதேபோல் எங்களை பற்றி அண்ணாமலைக்கு எவ்வளவு பெரிய கவலை.

பெருந்தலைவர் காமராஜரை கொலை செய்ய முயற்சி செய்தவர்கள் யார்?. அவருடைய மூதாதையர்கள், அவர் (அண்ணாமலை) ஏற்றுக்கொண்டிருக்கிற கொள்கைவாதிகள் டெல்லியில் பெருந்தலைவர் காமராஜரை வீட்டோடு வைத்து எரித்து கொலை செய்ய முயற்சி செய்தார்கள். செய்து விட்டு வாக்குகளுக்காக அவருக்கு பிறந்த நாள் விழா எடுப்பது, இறந்த தினம் அனுசரிப்பது என்ற வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். பாஜக, ஆர்.எஸ்.எஸ். கோஷத்தை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவ்வாறு செல்வப்பெருந்தகை பதில் அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து