முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக வாக்காளர்களாக 6.50 லட்சம் பீகாரிகள்: ப.சிதம்பரம் கண்டனம்

ஞாயிற்றுக்கிழமை, 3 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Chidambaram-2023-05-11

Source: provided

சென்னை : பீகாரை சேர்ந்த 6.50 லட்சம் பேரை தமிழக வாக்காளர்களாக சேர்ப்பது ஆபத்தானது என்று  ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

பீகாரில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதில், பீகாரில் இருந்து வெளி மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்துள்ள 36 லட்சம் பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

நீக்கப்பட்ட பீகாரிகள், தற்போது வேலை நிமித்தமாக புலம்பெயர்ந்துள்ள தமிழகம், ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் வாக்குரிமை வழங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் வசித்து வரும் புலம்பெயர்ந்த பீகாரிகள் 6.50 லட்சம் பேருக்கு தமிழகத்தில் வாக்குரிமை வழங்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.  

இந்நிலையில், பீகாரை சேர்ந்த 6.50 லட்சம் பேரை தமிழக வாக்காளர்களாக சேர்ப்பது ஆபத்தானது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,  பீகாரில் நடைபெற்றுவரும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியால்   65 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கும் உரிமையை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளபோது, பீகாரை சேர்ந்த 6.50 லட்சம் பேரை தமிழக வாக்காளர்களாக சேர்க்கப்பட உள்ளதாக வெளியான தகவல் ஆபத்தானது மட்டுமின்றி சட்டவிரோதமானது. மேலும், இது தமிழக வாக்காளர்கள் அவர்களின் அரசை தேர்ந்தெடுக்கும் உரிமையில் தலையிடுவதாகும்.

மாநில தேர்தலின்போது புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊரான பீகாருக்கு ஏன் செல்லக்கூடாது? வழக்கமாக அவ்வாறுதானே நடைமுறை உள்ளது. சாத் பூஜை விழாவின்போது பீகாரை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லவில்லையா?

இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதன் அதிகாரங்களை தவறாக பயன்படுத்தி மாநிலங்களின் தேர்தல் தன்மை மற்றும் முறைகளை மாற்ற முயற்சிக்கிறது. இந்த அதிகார துஷ்பிரயோகத்தை எதிர்த்து அரசியல் ரீதியிலும், சட்டரீதியிலும் போராட வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து