முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

35 ஆண்டுகால மோதல் முடிவு வந்தது: அர்மீனியா - அஜர்பைஜான் ஒப்பந்தம்

ஞாயிற்றுக்கிழமை, 10 ஆகஸ்ட் 2025      உலகம்
Armenia-Azerbaijan 2025-08-

Source: provided

35 ஆண்டுகால மோதல் முடிவு வந்தது: அர்மீனியா - அஜர்பைஜான் ஒப்பந்தம் 

மாஸ்கோ : ரஷ்யாவின் தெற்கே தெற்கு காகசஸில் உள்ள ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் ஆகிய இரு நாடுகள் நீண்ட காலமாக மோதலில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் 35 ஆண்டுகால மோதலை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் வைத்து இரு நாட்டு தலைவர்களும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

அமெரிக்கா சென்றுள்ள அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் மற்றும் ஆர்மீனிய பிரதமர் நிகோல் பாஷினியன் ஆகியோர் அதிபர் டிரம்ப் முன்னிலையில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு கைகுலுக்கிக்கொண்டனர். எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்த அமெரிக்காவுடன் ஆர்மீனியாவும் அஜர்பைஜானும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக அஜர்பைஜானை நக்சிவானுடன் இணைக்கும் ஒரு பெரிய போக்குவரத்து வழித்தடத்தை உருவாக்குவதற்கான திட்டம் உள்ளது. ஒப்பந்தத்தின்படி இந்த வழித்தடத்தின் உரிமைகளை அமெரிக்கா சொந்தமாக்கிக் கொள்ளும். இது சர்வதேச அமைதி மற்றும் செழிப்புக்கான "டிரம்ப் பாதை" என்று அழைக்கப்படும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இந்தப் பாதை இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், எரிசக்தி துறைகளில் புதிய வாய்ப்புகளைத் திறக்கும் என்று கூறப்படுகிறது. இதை ஐரோப்பிய நாடுகள் வரவேற்றாலும், இரு நாடுகளுடனும் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ஈரான் இது அமெரிக்காவின் ஆதிக்கத்தை உருவாக்கும் என்று எச்சரித்துள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து