எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுதில்லி : ஆதார், குடும்ப அட்டை உள்ளிட்டவற்றை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது என்ற தேர்தல் ஆணையத்தின் கருத்தை ஏற்பதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. பீகார் சிறப்பு வாக்களர் திருத்தம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது.
பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது வாக்காளர்களின் குடியுரிமை ஆவணமாக ஆதார், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவற்றை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது என்ற நிபந்தனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. பீகாரில் நிகழாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணியை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது.
இந்த பணியில், ‘பீகாரில் கடந்த 2003-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலில் பெயர் இடம்பெற்றவா்கள், எந்தவொரு ஆதார ஆவணங்களையும் தாக்கல் செய்யத் தேவையில்லை. ஆனால், அந்தப் பட்டியலில் இடம்பெறாத வாக்காளா்கள், தங்களின் குடியுரிமையை நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) நகல் போன்ற கூடுதல் ஆவணங்களைச் சமா்ப்பிக்க வேண்டும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்தது.
இதை எதிர்த்து பல்வேறு கட்சிகள் மற்றும் ஜனநாயக சீா்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆா்) சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த ஜூலை மாதம் விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சுப்ரீம் கோர்ட், பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது வாக்காளர்களின் குடியுரிமை ஆவணமாக ஆதார், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவற்றை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது.
இது குறித்து பதிலளிக்கவும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், நே்ு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஆதார், குடும்ப அட்டை உள்ளிட்டவற்றை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது என்ற தேர்தல் ஆணையத்தின் கருத்தை ஏற்பதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-08-2025.
13 Aug 2025