முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரியில் எய்ட்ஸ் தொற்றுள்ளவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை: முதல்வர் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 12 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Rangasamy 2025-08-12

Source: provided

புதுச்சேரி : எய்ட்ஸ் தொற்றுள்ள பெற்றோரின் குழந்தைகளுக்கு, பள்ளியில் படிப்போருக்கு ரூ.5,000, கல்லூரியில் படிப்போருக்கு ரூ.12,000 கல்வி உதவித் தொகையாக தரப்படவுள்ளது என்று கூறிய முதல்வர் ரங்கசாமி, எய்ட்ஸ் பாதித்தோரின் பயணப்படி ரூ.1000 ஆகவும் உயர்த்தப் படவுள்ளதாக கூறினார்.

நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்களுக்கு எச்.ஐ.வி- எய்ட்ஸ் மற்றும் பாலியல் நோய் பற்றிய தகவல்களை தெரிவிக்கும் விதமாக விவேகானந்தர் பிறந்த நாளான சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு, நேற்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அந்தந்த மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கங்கள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டன.

அதன்படி, புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் இரண்டு மாத எச்ஐவி-எய்ட்ஸ் தீவிர விழிப்புணர்வு பிரச்சார துவக்க விழா கம்பன் கலையரங்கில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி விழிப்புணர்வு சுவரொட்டிகளை வெளியிட்டார். முன்னதாக கலைக்குழுவின் கூடிய பிரச்சார ஊர்தியையும் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியையும் முதல்வர் ரங்கசாமி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

பின்னர் விழிப்புணர்வு நிகழ்வில் பேசிய முதல்வர் ரங்கசாமி கூறியதாவது: ”பள்ளி படிப்பை முடித்து கல்லூரி செல்லும் போது சில மாற்றங்கள் குழந்தைகளுக்கு ஏற்படும். சில தீய பழக்கங்கள் சிலரால் ஏற்படுவதை கட்டுப்படுத்த வேண்டும். போதை பழக்கத்துக்கு ஆளாகிவிடக்கூடாது. சிலர் பணக்காரராக குழந்தைகளை கெடுக்கிறார்கள்.

எய்ட்ஸ் நோய் பாதித்தோருக்கு நல்ல சத்தான உணவு வழங்கப்பட வேண்டும் என்பதை உணர்ந்து, ரூ.1,250 மதிப்புள்ள சத்துணவு பெட்டகம் வழங்கப்படவுள்ளது. எய்ட்ஸ் தொற்றுள்ள பெற்றோர்களின் குழந்தைகளுக்கு பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு செலவுக்கு உதவித்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி,பள்ளி அளவில் படிக்கும் மாணவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரமும், கல்லூரி அளவில் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு ரூ.12 ஆயிரமும் தரப்படும். எய்ட்ஸ் நோயால் இறந்தவர்களின் குடும்பத்துக்கு இறுதிச் சடங்கு நடத்த உதவி தொகையாக ரூ.15 ஆயிரம் தரப்படும். இது விரைவில் செயல்படுத்தப்படும்” என்று புதுவை முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து