எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை: த.வெ.க. மாநாட்டிற்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள சூழ்நிலையில் முதன் முறையாக தேர்தலை சந்திக்க தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது. அந்த வகையில் வரும் 25-ந்தேதி மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பாரபத்தி பகுதியில் 2-வது மாநில மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு காரணங்களுக்காக காவல்துறை கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் மாநாடு 4 நாட்களுக்கு முன்னதாக 21-ந் தேதி நடைபெறும் என்று த.வெ.க. தலைவர் விஜய் அறிவித்தார்.
த.வெ.க. மாநாட்டிற்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 500 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் மாநாடு நடைபெறுவதற்காக சுத்தம் செய்யப்பட்ட இடத்தில் பிரம்மாண்ட விழா மேடை, விஜய் தனது ரசிகர்களையும் தொண்டர்களையும் நடந்து சென்று சந்திப்பதற்கான 'ரேம்ப் வாக்' நடைமேடை மற்றும் பொதுமக்கள் அமர்ந்து பார்க்கும் இடத்தில் தடுப்பு வேலி அமைக்கும் பணிகள் பணி நிறைவு பெற்றுள்ளது.
ஒலி, ஒளி கருவிகள் பொருத்துவதற்கான கேலரிகள், மின்விளக்குகள் சில இடங்களில் பொருத்தப்பட்டு அதற்கான மின் இணைப்புகளும் கொடுக்கப்பட்டு வருகிறது. மாநாட்டின் பிரமாண்ட முகப்பு ஆர்ச் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதேபோல மூன்று இடங்களில் மாநாட்டிற்கு வரும் தொண்டர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக பார்க்கிங் வசதி இடம் தயார் செய்யப்பட்டு வருகிறது.
மாநாட்டு திடலில் ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்டோர் அமர்வதற்கு இருக்கைகள் போடப்பட இருக்கிறது. மற்ற மாநாடுகளை விட இந்த மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்களின் தண்ணீர் தாகம் தீர்க்கும் விதமாக சுத்திகரிக்கட்ட குடிநீர் வினியோகம் 24 மணி நேரமும் செயல்படுத்த முடிவு செய்ததை தொடர்ந்து நிலத்திற்கு அடியில் பத்தாயிரம் அடிக்கு பைப்புகள் பொருத்தப்பட்டு உள்ளது.
1000-க்கும் மேற்பட்ட குழாய்கள் அமைக்கப்பட்டு காலை முதல் மாலை வரை தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் வழங்குவதற்கு புதிய திட்டம் மேற்கொள்ளப்பட்டு அந்தப் பணிகளும் கிட்டத்தட்ட முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. ஓரிரு நாட்களில் பணிகள் முழுமையாக நிறைவடையும் நிலையில் பின்னர் குழாய் மூலம் திறந்து விடப்பட்டு தண்ணீர் முறையாக செல்கிறதா என்கிற சோதனை நடத்தப்பட உள்ளதாகவும் கட்சி மாநாடு ஏற்பாடு பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் ஒரு லாரிக்கு 40 ஆயிரம் லிட்டர் வீதம் 40 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தண்ணீர் லாரிகள் மாநாட்டுத் திடலில் நிறுத்தப்பட்டு தண்ணீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.
தென் மாவட்டங்களில் விஜய் பலத்தை நிரூபிக்க நடத்தப்படும் த.வெ.க. 2-வது மாநில மாநாடு அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மாநாட்டிற்கு இன்னும் 6 நாட்களே உள்ளதால் மாநாடு முன்னேற்பாடு பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது மாநாட்டு திடல் முழுவதும் த.வெ.க. கொடிகள் கட்டப்பட்டு பட்டொளி வீசி பறப்பது அந்த வழியாக செல்வோரை வெகுவாக ஈர்த்து வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-08-2025.
14 Aug 2025 -
இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளது: த.வெ.க. மாநாடு பணிகள் மும்முரம்
14 Aug 2025மதுரை: த.வெ.க. மாநாட்டிற்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
-
திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றம் கோலாகலம்
14 Aug 2025திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
-
ரசிகர் கொலை வழக்கில் ஜாமீன் ரத்து: கன்னட நடிகர் தர்ஷன் கைது
14 Aug 2025பெங்களூரு: நடிகை பவித்ரா கவுடாவை சீண்டிய ரசிகரை கொலை செய்த வழக்கில், நடிகர் தர்ஷன் ஜாமீன் ரத்து செய்யப்பட்ட நிலையில் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.
-
சென்னையில் கைது செய்யப்பட்ட தூய்மை பணியாளர்கள் அனைவரும் விடுவிப்பு
14 Aug 2025சென்னை: சென்னையில் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
-
வாக்காளர்களை இழிவுபடுத்த வேண்டாம்: தேர்தல் ஆணையம்
14 Aug 2025புதுடெல்லி, வாக்காளர்களை இழிவுபடுத்த வேண்டாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
ஆதாரை அடையாள ஆவணமாக தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும் சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு
14 Aug 2025புதுடெல்லி: ஆதாரை அடையாள ஆவணமாக தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
நாமக்கல் மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கியை துவக்கி வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்
14 Aug 2025சென்னை: மத்தியக் கூட்டுறவு வங்கியிலிருந்து பிரித்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியை முதல்வர் தொடங்கி வைத்தார்.
-
தொடர் விடுமுறை எதிரொலி: விமான கட்டணங்கள் உயர்வு
14 Aug 2025சென்னை, சுதந்திர தினத்தையொட்டி, வருகிற வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர் விடுமுறை வருகிறது.
-
சாலைகள் சீரமைக்கப்படும்: ஏலகிரி மலைவாழ் மக்களிடம் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி
14 Aug 2025ஏலகிரி: தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஏலகிரியில் பழுதடைந்த அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படும்.
-
பாக்., ராணுவத்தில் புதிய படை
14 Aug 2025லாகூர், பாகிஸ்தான் நாட்டின் 79-வது சுதந்திர நாள் நேற்று (ஆக.14) கொண்டாடப்பட்டது.
-
வாக்குத்திருட்டு என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் பதில்
14 Aug 2025டெல்லி, வாக்குத் திருட்டு' போன்ற மோசமான சொற்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை வழங்குமாறும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
-
வட மாநிலங்களில் கனமழை
14 Aug 2025புதுடெல்லி, நாட்டின் தலைநகர் டெல்லி உள்பட வட இந்திய மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
-
நமது வரலாற்றின் துயரமான அத்தியாயம் தேச பிரிவினை பிரதமர் நரேந்திர மோடி பதிவு
14 Aug 2025புதுடெல்லி: நாடு பிரிவினையைச் சந்தித்தபோது எண்ணற்ற மக்கள் கற்பனை செய்ய முடியாத இழப்பை எதிர்கொண்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
-
காலை உணவு முதல் ரூ.10 லட்சம் காப்பீடு வரை: தூய்மைப் பணியாளர்கள் நலனுக்காக 6 திட்டங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
14 Aug 2025சென்னை: காலை உணவு முதல் ரூ.10 லட்சம் காப்பீடு வரை, தூய்மைப் பணியாளர்கள் நலனுக்காக 6 சிற்ப்பு திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
இன்று 79-வது சுதந்திரதின விழா: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் போலீசார்
14 Aug 2025சென்னை: சுதந்திரதின விழாவையொட்டி தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.;
-
தமிழக கவர்னரில் தேநீர் விருந்தை புறக்கணித்தார் முதல்வர் ஸ்டாலின்
14 Aug 2025சென்னை: தமிழக கவர்னரில் தேநீர் விருந்தை முதல்வர் ஸ்டாலின் புறக்கணித்துள்ளார்.
-
பீகாரில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் பெயர்களை வெளியிடுங்கள் தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
14 Aug 2025புதுடெல்லி: பீகார் மாநிலத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை 3 நாட்களில் இணைய
-
தூய்மைப் பணியாளர்கள் கைது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
14 Aug 2025சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
-
அரசியல் சண்டைகளுக்கு நடுவே மாட்டிக்கொண்டிருக்கிறோம்: தேர்தல் ஆணையம் அதிருப்தி
14 Aug 2025புது தில்லி, அரசியல் சண்டைகளுக்கு நடுவே நாங்கள் மாட்டிக் கொண்டிருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
உங்களுக்காக நிற்கும் எளியோரின் அரசு இது: தூய்மை பணியாளர்கள் மாண்பை விட்டுக்கொடுக்கவே மாட்டோம் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
14 Aug 2025சென்னை: என்றும் உங்களுடன் உங்களுக்காக நிற்கும் எளியோரின் அரசு என தெரவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தூய்மை பணியாளர்களின் மாண்பை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும் உறுதி
-
இந்தியா - பாக். பிரிவினை காயம் ஆறவில்லை: தமிழ்நாடு கவர்னர்
14 Aug 2025சென்னை, இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் காயங்கள் இன்னமும் ஆறவில்லை என்றும் ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
-
8 தமிழக மீனவர்களுக்கு அபராதம், 16 பேருக்கு மேலும் காவல் நீட்டிப்பு: இலங்கை நீதிமன்றம் உத்தரவு
14 Aug 2025ராமேசுவரம், சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 8 பேருக்கு ரூ.9 லட்சம் அபராதம் விதித்தும், 16 தமிழக மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு செய்தும் இலங்கையின் மன்னார் நீதிமன்றம
-
அவர்கள் தேச விரோதிகளா? தூய்மைப் பணியாளர்கள் கைது விவகாரத்தில் விஜய் ஆவேசம்
14 Aug 2025சென்னை, அராஜகப் போக்குடன் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.
-
பீகார், உ.பி., இ.பி. உள்ளிட்ட வட மாநிலங்களில் கனமழை: டெல்லிக்கு ஆர்ஞ்ச் எச்சரிக்கை
14 Aug 2025புதுடெல்லி, பீகார், உத்தரப்பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. டெல்லிக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.