முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செப்.15 முதல் காப்பீடு, பங்குச் சந்தை முதலீடுக்கு யு.பி.ஐ. பரிவர்த்தனை வரம்பு 10 லட்சம் ரூபாய் வரை உயர்வு

வியாழக்கிழமை, 11 செப்டம்பர் 2025      இந்தியா
UPI

புதுடெல்லி, காப்பீட்டு பிரீமியம், பங்குச் சந்தை முதலீட்டுக்கான ஒரு நாள் யு.பி.ஐ. பரிவர்த்தனை உச்சவரம்பு ரூ.10 லட்சம் வரை உயர்கிறது. இது வரும் 15-ம் தேதி அமலுக்கு வருகிறது. 

இப்போதுள்ள விதிமுறைகளின்படி, ஒருவருடைய வங்கிக் கணக்கிலிருந்து மற்றொருவர் கணக்குக்கு யு.பி.ஐ. மூலம் ஒரு நாளில் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் மட்டுமே பணம் அனுப்ப முடியும். அதேநேரம், பங்குச் சந்தை முதலீடு மற்றும் காப்பீட்டு பிரீமியம், கடன் அட்டை நிலுவை செலுத்துவது உட்பட நிறுவனங்களுக்கான பரிவர்த்தனை வரம்பு ரூ.2 லட்சமாக உள்ளது. கல்விக் கட்டணம், ஐ.பி.ஓ. (முதல் பங்கு வெளியீடு) ஆகியவற்றுக்கு ரூ.5 லட்சமாக உள்ளது.

இந்த நிலையில் யு.பி.ஐ. பரிவர்த்தனை ஒரு முறை மற்றும் 24 மணி நேர உச்சவரம்பை இந்திய தேசிய பணப்பட்டுவாடா கழகம் (என்பிசிஐ) உயர்த்தி உள்ளது. இது வரும் 15-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி பங்குச் சந்தை முதலீடு, காப்பீட்டு பிரீமியம் மற்றும் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகைக்கான (இஎம்டி) உச்ச வரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேநேரம், ஒரு முறை பரிமாற்ற வரம்பு ரூ.5 லட்சமாக உயர்கிறது.

இதுபோல போக்குவரத்து கட்டணம் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்கிறது. கடன் அட்டை நிலுவை செலுத்துவதற்கான வரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாகவும், நகை வாங்குவதற்கான வரம்பு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாகவும் உயர்கிறது. கல்விக் கட்டணம், மருத்துவமனை கட்டணம் மற்றும் ஐபிஓ (முதல் பங்கு வெளியீடு) பரிவர்த்தனை ரூ.5 லட்சமாகவே தொடர்கிறது. இதுபோல தனிநபர் மற்றொரு தனி நபருக்கு அனுப்புவதற்கான உச்ச வரம்பு ரூ.1 லட்சமாகவே தொடர்கிறது.

இதுகுறித்து என்பிசிஐ வெளியிட்ட அறிக்கையில், “பணப் பரிவர்த்தனை தொகையை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதால், தொகை வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, நிறுவனங்களுக்கான கட்டணங்களை தடையின்றி செலுத்துவதை உறுதி செய்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து