முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டத்தை மதித்து நடப்போம்: த.வெ.க.வினருக்கு விஜய் உத்தரவு

வியாழக்கிழமை, 11 செப்டம்பர் 2025      தமிழகம்
Vijay-1 2025-07-30

Source: provided

சென்னை: விஜயின் தேர்தல் சுற்றுப்பயணத்திற்கு போலீசார் விதித்த நிபந்தனைகள் மதித்து நடப்போம் என்று கூறினார்

த.வெ.க. தலைவர் விஜய் வருகிற 13-ந்தேதி தனது தேர்தல் சுற்றுப் பயணத்தை திருச்சியில் இருந்து தொடங்குகிறார். விஜய் சுற்றுப்பயணத்திற்கு 23 நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து உள்ளனர்.திருச்சி டி.வி.எஸ். டோல்கேட்டில் இருந்து மரக்கடையில் பேச அனுமதிக்கப்பட்ட இடம் வரை காருக்குள் இருந்து தான் பயணம் செய்ய வேண்டும். பிரசார வேனில் நின்றபடி பிரசாரம் செய்யக் கூடாது. மீறினால் சுற்றுப் பயணம் அனுமதி ரத்து செய்யப்படும் என பல்வேறு நிபந்தனைகளை விதித்து உள்ளனர்.

போலீசாரின் நிபந்தனைகள் த.வெ.க.வினருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஆளுங்கட்சி மற்றும் கட்சிகளின் இதர பிரசாரத்திற்கு போலீசார் எளிதாக அனுமதி வழங்குகின்றனர். த.வெ.க. தலைவருக்கு மட்டும் கடும் கட்டுப்பாடு விதிக்கின்றனர் என தமிழகம் முழுவதும் த.வெ.க. நிர்வாகிகள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதையடுத்து த.வெ.க. தொண்டர்களுக்கு கட்சி தலைவர் விஜய், ஆளுங்கட்சி செய்வதை செய்யட்டும். நாம் அனைவரும் சட்டத்தை மதித்து நடப்போம். சட்டத்தை மீறி எந்த செயலிலும் த.வெ.க.வினர் ஈடுபடக் கூடாது. தமிழகம் முழுவதும் நாம் நடத்த இருக்கும் மக்கள் சந்திப்பு தடைகளை கடந்து வெற்றியை நோக்கி நமது லட்சிய பயணம் தொடரும் என விஜய் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து