முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பலூனில் பறக்கும் போது பிடித்த தீ; அதிர்ஸ்டவசமாக உயிர் தப்பிய ம.பி. முதல்வர் மோகன் யாதவ்

சனிக்கிழமை, 13 செப்டம்பர் 2025      இந்தியா
Mohan-Yadav-2024-07-25

Source: provided

போபால் : மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் சென்ற வெப்ப காற்று பலூன் தீப்பிடித்தது. இதில் அவர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினார்.

இதுபற்றிய விவரம் வருமாறு:- 

மந்தசௌர் பகுதியில் உள்ள காந்திசாகர் வனப்பகுதியில் வெப்ப காற்று பலூன் ஒன்றில் பறக்க மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் விரும்பினார். அதற்காக அவர் பலூனில் ஏறினார். அடுத்த சில நிமிடங்களில் பலூன் தயாராக இருந்த போது எதிர்பாராத விதமாக தீப்பிடித்தது.

பலத்த காற்றினால் பலூன் மேலே எழும்ப முடியாமல் தடுமாறியது. அடுத்த சில விநாடிகளில் தீப்பிடிக்க, சமயோசிதமாக செயல்பட்ட முதல்வர் மோகன் யாதவ் பாதுகாவலர்கள் அவரை காப்பாற்றினர். இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

இதுகுறித்து முதல்வர் மோகன் யாதவ் கூறியதாவது:- இந்த வனப்பகுதியில் சுற்றுலா பயணிகளை கவர பல அம்சங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. சுற்றுலா தலமான இந்த காந்திசாகருக்கு நான் நேற்றே வந்துவிட்டேன். மத்திய பிரதேச சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் மேம்படுத்தப்பட்ட சுற்றுலா மையமாக இந்த பகுதி உள்ளது.  இவ்வாறு முதல்வர் மோகன் யாதவ் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து