எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சுரங்கத் திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்துக்கேட்பிலிருந்து விலக்கு அளித்துள்ள குறிப்பாணையை திரும்ப பெற வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பாதிப்புகளைக் கருத்தில்...
மத்திய அரசு சில சுரங்கத் திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்துக் கேட்பிலிருந்து விலக்கு அளித்துள்ள நிலையில், இதனால் ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள குறிப்பாணையினைத் திரும்ப பெற உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று (12-9-2025) கடிதம் எழுதியுள்ளார்.
அரிய வகை கனிமங்கள்....
அக்கடிதத்தில், இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுப் பிரிவால் 08.09.2025 அன்று (எண். IA-Z-11013/136/2025-IA-I) வெளியிடப்பட்டுள்ள அலுவலகக் குறிப்பாணையின் மீது கவனத்தை ஈர்க்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ள முதல்வர் , அந்தக் குறிப்பாணையின் மூலம், பகுதி B-ல் அறிவிக்கப்பட்ட அணு கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின் முதல் அட்டவணையின் பகுதி D-ல் அறிவிக்கப்பட்ட முக்கியமான மற்றும் அரிய வகை கனிமங்களின் அனைத்து சுரங்கத் திட்டங்களும் பொது மக்கள் கருத்துக் கேட்பின் தேவையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன என்றும், மேலும், அத்தகைய அனைத்துத் திட்டங்களும் சம்பந்தப்பட்ட குத்தகைப் பகுதியின் அளவைக் கருத்தில் கொள்ளாமல், மத்திய அளவில் மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுற்றுச்சூழல் ரீதியாக...
தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் கடற்கரை மணல் அமைப்புகளில் படிந்துள்ள அரிய மண் கனிம கூறுகளின் படிவுகளைக் கொண்டுள்ளன என்றும், இந்தக் கடற்கரைகள் சுற்றுச்சூழல் ரீதியாக மிகவும் பாதிக்கப்படக்கூடியவை என்றும் குறிப்பிட்டுள்ள முதல்வர் , மன்னார் வளைகுடா மற்றும் பாக் விரிகுடாவின் மணல் கடற்கரைகள் அழிந்து வரும் ஆமைகளின் இனப்பெருக்கம், பவளப்பாறைகள், சதுப்பு நிலங்கள் மற்றும் மணல் திட்டுகளுக்கு தாயகமாக உள்ளன என்றும், அவை கடலரிப்பு மற்றும் சூறாவளி நிகழ்வுகளுக்கு எதிராக இயற்கைக் கேடயங்களாகச் செயல்படுகின்றன என்றும் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
கடல் அரிப்பிலிருந்து...
மேலும், இந்தச் சுற்றுச்சூழல் அமைப்புகள் பல்லுயிரியலை நிலைநிறுத்துகின்றன; கரையோரங்களை உறுதிப்படுத்துகின்றன; கார்பனை பிரித்தெடுக்கின்றன மற்றும் கடல் அரிப்பிலிருந்து சமூகங்களைப் பாதுகாக்கின்றன என்றும் குறிப்பிட்டுள்ள அவர், இத்தகைய பகுதிகளில் சுரங்கம் என்பது இயல்பாகவே சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கொண்டது என்றும், எனவே, உள்ளூர் சமூகங்களின் முழுமையான ஈடுபாட்டுடன் கடுமையான ஆய்வு தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கவலைகளை எழுப்பும்...
1997-ம் ஆண்டு திருத்தப்பட்ட 1994-ம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிப்பு, கட்டாய பொது மக்கள் கருத்துக் கேட்புகளை அறிமுகப்படுத்தியது என்பதை நினைவு கூர்ந்துள்ள முதல்வர் , இந்தப் பங்கேற்பு சுற்றுச்சூழல் நிர்வாகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறி, ஒரு மைல்கல்லாகத் திகழ்கிறது என்று தெரிவித்துள்ளார். இந்தப் பாதுகாப்பு 2006-ம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிப்பில் வலுப்படுத்தப்பட்டது என்றும், பொது மக்கள் கருத்துக் கேட்பிலிருந்து திட்டங்களுக்கு விலக்கு அளிப்பது என்பது, வாழ்வாதார இழப்பு, இடப்பெயர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பான நியாயமான கவலைகளை எழுப்பும் உள்ளூர் சமூகங்களின் உரிமையைப் பறிக்கும் என்றும், இது மக்கள் பங்கேற்கும் ஜனநாயகத்தின் கொள்கைகளை பலவீனப்படுத்தும் என்றும் கவலைபடத் தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு....
மத்திய அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்தக் குறிப்பாணை, கடுமையான சட்டரீதியான கவலைகளையும் எழுப்புகிறது என்றும், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த காலங்களில் சட்டப்பூர்வ பாதுகாப்புகளை நீர்த்துப்போகச் செய்யும் இத்தகைய அலுவலகக் குறிப்பாணைகளை ரத்து செய்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ள முதல்வர் , அலம்பிக் பார்மசூட்டிகல்ஸ் லிமிடெட் ரோகித் பிரஜாபதி (2020) வழக்கில், சுப்ரீம் கோர்ட்டு, அலுவலகக் குறிப்பாணைகள் போன்ற நிர்வாக அறிவுறுத்தல்கள் மூலம் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு கட்டமைப்பில் கணிசமான திருத்தங்களைக் கொண்டு வரமுடியாது என்றும், அத்தகைய கருவிகள் சட்டப்பூர்வ அறிவிப்புகளை மீற முடியாது என்றும் தீர்ப்பளித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தற்போதைய அலுவலகக் குறிப்பாணை பொது மக்கள் கருத்துக் கேட்பிற்கு வழிவகுக்காமல், அனுமதிக்க முடியாத நிர்வாகச் சட்டத் திருத்தத்திற்குச் சமமாக உள்ளது என்றும், எனவே இது நிலைக்கத்தக்கதல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களாட்சி நெறிமுறை....
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கொள்கை மாற்றங்கள் பாராளுமன்றத்திலும், மாநில சட்டமன்றங்களிலும் வெளிப்படையாக விவாதிக்கப்பட வேண்டும் என்றும், மாநில அரசுகள் மற்றும் பொதுமக்களின் உரிய ஆலோசனையுடன் செய்யப்பட வேண்டுமென்றும் தெரிவித்துள்ள முதல்வர் , மேற்கூறிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் வெளியிடப்படும் இத்தகைய அறிவிப்புகள் கூட்டாட்சி உணர்வுக்கும், நமது நாட்டின் மக்களாட்சி நெறிமுறைகளுக்கும் எதிரானதாக இது அமையும் என்றும் அவர் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
உடனடியாகத் திரும்ப...
மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, 08.09.2025 நாளிட்ட அலுவலகக் குறிப்பாணையை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு மத்திய அரசை தான் வலியுறுத்துவதாகவும், கடந்த காலங்களில் எப்போதும் செய்யப்பட்டது போல, நாட்டின் முன்னேற்றத்திற்கு மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்கு பங்களிப்பதற்கான தமிழ்நாட்டின் உறுதிப்பாட்டை இத்தருணத்தில் மீண்டும் தான் வலியுறுத்த விரும்புவதாகவும், முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இந்தியா மீது தாக்குதல் நடத்திய ஒரு வாரத்தில் சீனா அணு ஆயுத சோதனை மேற்கொண்டது: அமெரிக்கா
07 Feb 2026நியூயார்க், இந்தியா மீது தாக்குதல் நடத்திய ஒரு வாரத்தில் சீனா ரகசிய அணு ஆயுத சோதனை மேற்கொண்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்.. மேக் இந்தியா திட்டத்தை மேலும் வலுவாக்குகிறது: பிரதமர் மோடி..!
07 Feb 2026டெல்லி, இந்தியா - அமெரிக்கா இடையேயான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதற்கு அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்கா முழு வரிவிலக்கு அளித்த இந்திய ஏற்றுமதி பொருட்கள் எவை?
07 Feb 2026புதுடில்லி, அமெரிக்காவுடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ரத்தினங்கள், வைரங்கள், மருந்துப் பொருட்கள், காபி, வாழைப்பழம் உள்ள
-
தங்கம், விலை மீண்டும் உயர்வு
07 Feb 2026சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,360 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனையானது.
-
வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா வெளியிட்ட இந்திய வரைபடம்: பாகிஸ்தான் அதிர்ச்சி
07 Feb 2026நியூயார்க், வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க அரசுத்துறை வெளியிட்ட இந்திய வரைபடம் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது
-
தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை: டெல்லியில் ராகுல் இன்று ஆலோசனை
07 Feb 2026சென்னை, தமிழக சட்டசபையை முன்னிட்டு தி.மு.க.வுடனான கூட்டணி விவகாரம் குறித்து ராகுல் காந்தி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தம்: ஜூன் வரை கெடு விதித்த அமெரிக்கா: ஜெலன்ஸ்கி
07 Feb 2026கீவ், ரஷ்யா - உக்ரைன் இடையே 4 ஆண்டுகளாக போர் நடைபெற்று வரும்நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவரும் உடன்பாட்டைக் கொண்டுவருவதற்காக ஜூன் மாதம் வரையில் அமெரிக்கா காலக்கெடு
-
இந்தியா மீதான 25 சதவீதம் வரியை ரத்து செய்யும் உத்தரவில் கையெழுத்திட்ட ட்ரம்ப்
07 Feb 2026நியூயார்க், இந்தியா மீதான 25 சதவிகித அபராத வரியை ரத்து செய்யும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சனிக்கிழமை கையெழுத்திட்டார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –07-02-2026
07 Feb 2026 -
கோவையில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர்
07 Feb 2026கோவை, கோவை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை நாளை (வருகிற 9-ந் தேதி- திங்கட்கிழமை) முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில்
-
டிஜிட்டல் மோசடிகளில் பணத்தை இழப்பவர்களுக்கு விரைவில் ரூ.25,000 இழப்பீடு ரிசர்வ் வங்கி அறிவிப்பு
07 Feb 2026மும்பை, டிஜிட்டல் மோசடியில் பணத்தை இழந்தவர்களுக்கு மொத்த இழப்புத் தொகையின் 85 சதவீதம் வரை வழங்கப்படும்.
-
அ.ம.மு.க. நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கினார் டி.டி.வி.தினகரன்
07 Feb 2026சென்னை, சசிகலாவை சந்தித்த அ.ம.மு.க. நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கி டி.டி.வி.தினகரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
விக்கிரவாண்டி தொகுதியில் த.வெ.க. தலைவர் போட்டி?
07 Feb 2026சென்னை, விக்கிரவாண்டி தொகுதியில் த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிட போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
இந்தியாவின் ஜி.டி.பி. வளர்ச்சி 7.4 சதவீதமாக அதிகரிக்கும்: மத்திய ரிசர்வ் வங்கி கணிப்பு
07 Feb 2026டெல்லி, 2025-26 ஆம் ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (ஜி.டி.பி.) 7.4 சதவிகிதம் அதிகரிக்கும் என மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
-
இனி அரசு ஊழியர்கள் ராஜினாமா செய்தால் ஓய்வூதியம் கிடையாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
07 Feb 2026சென்னை, அரசு ஊழியர், மருத்துவ காரணங்களுக்காக ராஜினாமா செய்தால், ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்கள் பெற தகுதியில்லை என சென்னை உயர் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு த
-
பா.ஜ.க.வின் கிளையாக இருந்த அ.தி.மு.க., தற்போது இலையாக மாறிவிட்டது: துணை முதல்வர்
07 Feb 2026விருதுநகர், பா.ஜ.க.வின் கிளையாக இருந்த அ.தி.மு.க., தற்போது இலையாக மாறிவிட்டதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
-
இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு 30 டிரில்லியன் டாலர் மதிப்பிலான சந்தையை வாய்ப்பு கிடக்க உள்ளது: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை
07 Feb 2026டெல்லி, இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்ததால் புதிய வேலைவாய்ப்பு உருவாகும் என்றும் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு, குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், விவசாயிக
-
தென்னிந்தியாவின் இரும்பு மனிதர் தமழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. எம்.பி. கனிமொழி புகழாரம்
07 Feb 2026விருதுநகர், மாற்றத்தைக் கொண்டு வரக் கூடிய ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின்தான் என்றும் தென்னிந்தியாவின் இரும்பு மனிதர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்றும் தி.மு.க. எம்.பி.
-
வழக்குகள் ஏதேனும் இருக்கிறதா உள்பட த.வெ.க. விருப்ப மனுவில் கேட்கப்பட்ட 36 கேள்விகள்
07 Feb 2026சென்னை, வழக்குகள் ஏதேனும் இருக்கிறதா என்பது உள்ளிட்ட த.வெ.க. விருப்ப மனுவில் 36 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
-
ஒபாமா தம்பதியை கேலி செய்து வீடியோ வெளியிட்ட ட்ரம்ப்..!
07 Feb 2026வாஷிங்டன், ஒபாமா தம்பதியை கேலி செய்து வீடியோ வெளியிட்ட நிலையில் அதிபர் ட்ரம்ப், இவ்விவகாரத்தில் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
-
வார ராசிபலன்
07 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
07 Feb 2026- இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் மாசி உற்சவாரம்பம். சுவாமி தங்க நந்தி வாகனம். அம்பாள் வெள்ளி அம்ச வாகனம்.
- திருமயம் ஆண்டாள் பவனி
-
இன்றைய ராசிபலன்
07 Feb 2026 -
இன்றைய நாள் எப்படி?
07 Feb 2026


