முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அஸ்ஸாமில் ரூ. 5,000 கோடியில் மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 14 செப்டம்பர் 2025      இந்தியா
Modi 2024-11-25

Source: provided

திஸ்பூர் : அஸ்ஸாம் மாநிலத்தில் கோல்கா மாவட்டத்தில் ரூ. 5,000 கோடி மதிப்பிலான மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி தொடக்கிவைத்தார்.

வட கிழக்கு மாநிலங்களுக்குச் சுற்றுப் பயணம் செய்துவரும் மோடி நேற்று முன்தினம் மணிப்பூரை முடித்து இரவே அஸ்ஸாம் சென்றடைந்தார். அஸ்ஸாமில் பாரத் ரத்னா விருது வென்ற மறைந்த பாடகர் பூபேன் ஹசாரிகாவின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டார். முதலில் டாரங் மாவட்டத்தில் ரூ.6,300 கோடி மதிப்பிலான சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளுக்கான அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, ஆலை திட்டத்தைப் பின்னர் அறிவித்தார்.

அஸ்ஸாமில் கோல்கா மாவட்டத்தில், நுமாலிகர் எனும் இடத்தில் ரூ. 5,000 கோடி மதிப்பிலான மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி தொடக்கிவைத்தார். இந்த ஆலைக்கு பூஜ்ய கழிவு என்பதால் மூங்கிலின் அனைத்து பாகங்களையும் பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த ஆலையினால் உள்ளூர் பொருளாதாரம் ரூ.200 கோடி லாபம் அடையுமெனவும் மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வட கிழக்கு மாநிலங்களில் இருந்து இதற்காக 5 லட்சம் டன் பச்சை மூங்கில்கள் கொண்டுவரப்படும். இதனால், நேரடியாகவும் மறைமுகமாவும் 50,000 மக்கள் பயன்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உலகின் முதல் மூங்கில் - எத்தனால் ஆலை என அஸ்ஸாம் மாநில செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து