Idhayam Matrimony

உயிர் தப்பிய 25,000 அமெரிக்க மக்கள்.. கரீபியன் கடலில் சம்பவம் குறித்து ட்ரம்ப் விளக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 19 அக்டோபர் 2025      உலகம்
Trump

நியூயார்க், அமெரிக்காவுக்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இதில் கரீபியன் கடல் பகுதியில் போதைப்பொருள் கடத்திய வெனிசுலா நாட்டு படகுகள் மீது அமெரிக்கா ராணுவம் தாக்குதல் நடத்தியது. 5 படகுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு 27 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் அமெரிக்காவை நோக்கி போதைப்பொருள் கடத்தி வந்த நீர்மூழ்கி கப்பல் மீது அமெரிக்கா அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளது. இதுதொடர்பாக டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது, அமெரிக்காவை நோக்கி வந்து கொண்டிருந்த மிகப் பெரிய போதைப்பொருள் கடத்தும் நீர்மூழ்கிக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அழிக்கப்பட்டது.

இந்தக் கப்பலில் பெரும்பாலும் பென்டானைல் மற்றும் பிற சட்டவிரோத போதைப்பொ ருட்கள் நிறைந்திருந்ததாக அமெரிக்க உளவுத்துறை உறுதிப்படுத்தியது. மேலும் அதில் போதைப்பொருள் கும்பலை சேர்ந்த 4 பேர் இருந்தனர். இந்த தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். மற்ற 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்குத் தொடரப்பட்டு அவர்களின் சொந்த நாடுகளான ஈக்வடார் ,கொலம்பியாவுக்குத் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.

இந்த நீர்மூழ்கிக் கப்பல் கரைக்கு வந்திருந்தால் அதில் உள்ள போதைப் பொருள் மூலம் சுமார் 25 ஆயிரம் அமெரிக்கர்கள் இறந்திருப்பார்கள். இந்தத் தாக்குதலில் எந்த அமெரிக்கப் படைகளுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. எனது கண்காணிப் பின் கீழ் நிலம் அல்லது கடல் வழியாக சட்டவிரோத போதைப்பொருள் கடத்தும் பயங்கரவாதிகளை அமெரிக்கா பொறுத்துக் கொள்ளாது" என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து