முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் ரகசிய அணு ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது : இந்தியா பரபரப்பு குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 8 நவம்பர் 2025      இந்தியா
Indian-General-2025-07-26

Source: provided

புதுடெல்லி : பாகிஸ்தானின் ரகசிய அணு ஆயுத நடவடிக்கை குறித்து இந்தியா குற்றச்சாட்டியுள்ளது.

அமெரிக்கா மீண்டும் அணு ஆயுத பரிசோதனையில் ஈடுபடப்போவதாக சமீபத்தில் டிரம்ப் அறிவித்தார். அப்போது, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டதையும் சுட்டிக்காட்டி இருந்தார். டிரம்பின் இந்த அறிவிப்புக்கு பதிலளிக்கும் வகையில், பாகிஸ்தான் தொடர்ந்து ரகசியமாக அணுசக்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இந்தியா பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளது. 

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், பாகிஸ்தானின் அணு ஆயுத பரவல் மற்றும் அந்த நாட்டின் அணு ஆயுத தந்தை என அழைக்கப்படும் ஏ.ஹியூ. கானின் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்தும் இந்தியா தொடர்ந்து சர்வதேச கவனத்துக்கு எடுத்துச் சென்று வருவதாக தெரிவித்தார்.

இது குறித்து ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், “பாகிஸ்தான் வரலாற்றில் ரகசியமான மற்றும் சட்ட விரோத அணு ஆயுத நடவடிக்கைகளை எப்போதும் அந்த நாடு தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இது பல தசாப்தங்களாக கடத்தல், ஏற்றுமதி கட்டுப்பாட்டு மீறல்கள், ரகசிய கூட்டாண்மைகள், ஏ.ஹியூ. கான் நெட்வொர்க் மற்றும் மேலும் பெருக்கத்தை மையமாகக் கொண்டது. பாகிஸ்தானின் இத்தகைய நடவடிக்கை தொடர்பாக இந்தியா எப்போதும் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த பின்னணியில் பாகிஸ்தானின் அணு ஆயுத சோதனை தொடர்பான ஜனாதிபதி டிரம்பின் கருத்துகளை நாங்கள் எடுத்துக்கொண்டு இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து