முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டவிரோத பணப்பரிமாற்றம் புகார்: சென்னையில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை திடீர் சோதனை

புதன்கிழமை, 19 நவம்பர் 2025      தமிழகம்
ED 2024-10-14

Source: provided

சென்னை : சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான புகாரின் அடிப்படையில் சென்னையில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது.

சென்னையில் சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், கே.கே.நகர், எம்ஜிஆர் நகர், சவுகார்பேட்டை, கீழ்ப்பாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 21 வாகனங்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள சைதன்யா அடுக்குமாடி குடியிருப்பில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த இரும்பு வியாபாரி நிர்மல் குமார் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள கலைச்செல்வன் என்பவரது வீட்டிலும், அம்பத்தூர் திருவேங்கடா நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பிரகாஷ் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து