முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை: கூட்ட நெரிசலில் பெண் பலி

புதன்கிழமை, 19 நவம்பர் 2025      ஆன்மிகம்
Sabarimala 2024-11-5

Source: provided

சபரிமலை : சபரிமலை கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்தார்.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த 16-ந்தேதி நடை திறக்கப்பட்டது. கோவிலில் கடந்த 3 நாட்களில் 2 லட்சத்து 34 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். சபரிமலையில் வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு சீசன் தொடக்கம் முதலே பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. வரலாறு காணாத வகையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் அடிப்படை வசதிகளை பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

சபரிமலையில் வழக்கமாக மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டு பிற்பகல் 3 மணிக்கு திறக்கப்படும். ஆனால், நேற்று முன்தினம் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் மதியம் 2 மணி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதன்பின்பு நடை அடைக்கப்பட்டு பிற்பகல் 3 மணிக்கு திறக்கப்பட்டது. கூட்ட நெரிசல் காரணமாக நேற்று முன்தினம் 10 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.  இதனிடையே நேற்று முன்தினம் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் பலியானார். 

அதாவது, கேரள மாநிலம் கோழிக்கோடு எடக்குளம் பகுதியை சேர்ந்தவர் சதி (வயது59). இவர் நேற்று முன்தினம் காலை தனது கணவர் மற்றும் அய்யப்ப குழுவினருடன் சபரிமலைக்கு வந்தார். இந்த குழுவினர் பம்பையில் இருந்து சன்னிதானம் சென்று கொண்டிருந்தபோது அப்பாச்சி மேடு பகுதியில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி சதி திடீரென மயங்கி விழுந்தார். அவரை கணவர் மற்றும் சக பக்தர்கள் மீட்டு பம்பையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து