முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூகுள் மேப்பில் 10 புதிய அம்சங்கள் அறிமுகம்

புதன்கிழமை, 19 நவம்பர் 2025      உலகம்
Google 2023-11-28

Source: provided

வாஷிங்டன் : கூகுள் மேப்பில் 10 புதிய அப்டேட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள் மத்தியில் தவிர்க்க முடியாத செயலியாக கூகுள் மேப்ஸ் உள்ளது. கூகுள் மேப்ஸ் இருந்தால் போதும், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை யாரிடம் வழி கேட்காமல் போய்விடலாம். அந்த அளவிற்கு கூகுள் மேப்சில் வழிகாட்டி வசதிகள் உள்ளன. கூகுள் மேப்ஸ் பயனர்களை கவரும் வகையிலும் போட்டியை சமாளிக்கும் வகையில் அவ்வப்போது தனது மேப்ஸ்களில் புதிய அப்டேட்களை செய்து வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக 10 புதிய அப்டேட்களை அறிமுகம் செய்துள்ளது. அதில் சில அப்டேட்கள் பற்றிய விவரங்கள் வருமாறு:-

கூகுளின் ஜெமினி ஏஐயுடன் மேப்ஸ் தற்போது நேரடியாக ஒருங்கிணைப்பதால், பயனர்கள் தங்கள் செல்போனை தொடாமல் நிகழ்நேர உரையாடல்களில் ஈடுபட முடியும்.  தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் இணைந்து, கூகுள் மேப்ஸ் இப்போது சாலையில் ஏற்படும் போக்குவரத்து தடைகள், மாற்றுப்பாதைகள், கட்டுமானம் குறித்த அப்டேட்ஸ்களை வழங்க தொடங்கியுள்ளது.

டூ வீலர் ஓட்டுநர்களுக்காக, கூகுள் மேப்ஸ் புதிய அவதார் வசதியை வழங்கியுள்ளது. சில குறிப்பிட்ட நகரங்களில் உள்ள பயனர்கள், கூகுள் மேப்ஸ் மூலம் நேரடியாக மெட்ரோ ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். விபத்து ஏற்படக்கூடிய பகுதிகளை நெருங்கும்போது பயனர்களை கூகுள் மேப்ஸ் இப்போது முன்கூட்டியே எச்சரிக்கும். இவ்வாறு அதில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து