முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய பாணியில் மீண்டும் பிரச்சாரம்: காஞ்சிபுரம் மாவட்ட மக்களை நாளை சந்திக்கிறார் த.வெ.க. தலைவர் விஜய்

வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2025      தமிழகம்
Vijay 2023-04-13

சென்னை, புதிய பாணியில் மீண்டும் பிரச்சாரத்தை தொடங்க திட்டமிட்டுள்ள த.வெ.க. தலைவர் விஜய் நாளை சென்னையில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 1,500 பேரை அவர் சந்திக்கிறார்.

வருகிற டிசம்பர் 4-ம் தேதி சேலத்தில் த.வெ.க. விஜயின் பிரச்சாரத்துக்கு போலீசார் அனுமதி மறுத்து உள்ளனர். இது தொடர்பாக அவர்கள் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளுக்கு பதில் கடிதம் அனுப்பி உள்ளனர். அதில், விஜய் பிரச்சாரத்துக்கு முந்தைய நாள் 3-ந் தேதி கார்த்திகை தீபம் விழாவுக்காக திருவண்ணாமலைக்கு பாதுகாப்பு பணிக்காக போலீசார் செல்வார்கள். அதே போல் டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனால் அன்றைய தினம் போலீஸ் பாதுகாப்பு போடப்படும்.

எனவே நீங்கள் கேட்கும் நாளில் அதாவது டிசம்பர் 4-ந்தேதி விஜய் பிரச்சார கூட்டத்துக்கு அனுமதி அளிக்க முடியாது என்றும் விஜயின் கூட்டத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது என்றும் நீங்கள் உங்கள் தலைமையை தொடர்பு கொண்டு வேறு தேதியை முடிவு செய்து மீண்டும் அனுமதி கேட்டு மனு கொடுங்கள் என்றும் தெரிவித்து இருந்தனர். மேலும் இனி வரும் காலங்களில் நிகழ்ச்சிகள் நடைபெறும் போது 4 வாரங்களுக்கு முன்பு அனுமதி கேட்டு மனு கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.

இதற்கிடையே சேலத்தில் விஜயின் தேர்தல் பிரச்சார கூட்டம் தள்ளிப் போவதால் அதற்கு முன்பு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்த விஜய் முடிவு செய்தார். இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் விஜயை சந்திக்க விரும்புவதாக தெரிவித்ததால் நாளை (ஞாயிற்றுக் கிழமை) மக்கள் சந்திப்பை நடத்த விஜய் திட்டமிட்டு உள்ளார். சென்னையில் இந்த மக்கள் சந்திப்பை நடத்த இடம் தேர்வு செய்துள்ளார்.

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஜேப்பியார் கல்லூரியில் இந்த மக்கள் சந்திப்பு நிகழ்வு நடக்கிறது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட பொதுமக்களை விஜய் சந்திக்கிறார். இதன் மூலம் விஜய் புதிய பாணியில் மீண்டும் அதிரடி பிரச்சாரம் செய்து மக்களின் ஆதரவை திரட்ட உள்ளார். தமிழகத்தில் தேர்தல் பொதுக்கூட்டம் நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் இன்னும் வெளியிடப்படாமல் கோர்ட் பரிசீலனையில் உள்ளது. இதனால் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி உள் அரங்கில் நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து