முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி கார் வெடிப்பு வழக்கு: மேலும் 4 பேருக்கு என்.ஐ.ஏ. காவல்

வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2025      இந்தியா
NIA 2024-04-06

புதுடெல்லி, டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கில் மேலும் 4 பேரை என்.ஐ.ஏ. காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட கார் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த அமீர் ரஷீத் அலி என்பவர் பெயரில் இருந்தது. அவர்தான் காரை வாங்கி உமர் முகமதுவுக்கு கொடுத்துள்ளார். இதனால் அமீர் ரஷீத் அலியை அதிகாரிகள் கைது செய்தனர். 

இதுபோல, சம்பவத்தில் தற்கொலை குண்டாக செயல்பட முதலில் ஜாசிர் பிலால்வானி என்பவர்தான் ஆயத்தமாக்கப்பட்டார். ஆனால் இடையில் அவர் பின்வாங்கினார். இவர் உமர் முகமதுவின் நண்பராக இருந்தார். இவரையும் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் இவர்கள் 2 பேரும் கோர்ட்டில் தனித்தனியாக ஆஜர்படுத்தப்பட்டு காவல் விசாரணைக்கு எடுக்கப்பட்டனர்.

இதற்கிடையே உமர் முகமதுவுடன் சேர்ந்து அல்பலா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய டாக்டர்கள் முசாமில் ஷகீல், ஷாகீன் சயித், அங்கு தங்கியிருந்த முப்தி இர்பான் அகமது மற்றும் டாக்டர் அதீல் அகமது ராதர் ஆகியோரும் பிடிபட்டு இருந்தனர். இவர்களை நேற்று முன்தினம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் முறையாக கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். 

அவர்களை 10 நாள் என்.ஐ.ஏ. காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இவர்களோடு சேர்த்து என்.ஐ.ஏ. அதிகாரிகளால் 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதற்கிடையே அல்பலா பல்கலைக்கழக பண மோசடி தொடர்பாக அமலாக்க விசாரணையும் தனியாக நடந்து கொண்டிருக்கிறது. அந்த பல்கலைக்கழகத்தின் தலைவர் ஜாவேத் அகமது சித்திக் கைது செய்யப்பட்டு 13 நாள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு இருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து