எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒருநாள் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் கடந்த ஒரு வாரமாக முதலிடத்தில் இருந்த நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் ஒரு இடம் குறைந்து 2-வது இடத்துக்கு சரிந்தார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் சதம் அடித்ததால் ஏற்றம் கண்ட அவர் காயம் காரணமாக அடுத்த 2 ஆட்டங்களில் ஆடாததால் சறுக்கலை சந்தித்துள்ளார்.
இதனால் 2-வது இடத்தில் இருந்த இந்திய வீரர் ரோகித் சர்மா (781 புள்ளி) மீண்டும் ‘நம்பர் 1’ இடத்துக்கு முன்னேறினார். இந்திய வீரர்களான சுப்மன் கில் 4-வது இடத்திலும், விராட் கோலி 5-வது இடத்திலும், ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு இடம் சரிந்து 9-வது இடத்திலும் உள்ளனர்.
சிராஜ் செய்த செயல் வைரல்
இந்திய கிரிக்கெட் அணி 12 ஆண்டுகளாக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழக்காமல் வீறுநடை போட்ட அந்த மகத்தான பயணம் கடந்த ஆண்டு அக்டோபர்- நவம்பரில் நியூசிலாந்திடம் 0-3 என்ற கணக்கில் தோற்றதன் மூலம் முடிவுக்கு வந்தது. அடுத்த ஓராண்டுக்குள் 0-2 என தென் ஆப்பிரிக்காவிடம் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. இதனால் தலைமை பயிற்சியாளர் கம்பீரை நீக்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளத்தில் குரல் கொடுத்து வருகிறார்கள். கம்பீரின் பயிற்சியின் கீழ் இந்திய அணி இதுவரை 19 டெஸ்டுகளில் விளையாடி 7-ல் வெற்றியும், 10-ல் தோல்வியும், 2-ல் டிராவும் கண்டுள்ளது.
இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு பரிசளிப்பு விழா நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது இந்திய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் என அனைவரும் அதில் கலந்து கொண்டனர். அப்போது ரசிகர்கள் காம்பீர் டவுன் டவுன் என கோஷமிட்டனர். அதனை காம்பீர் கண்டுகொள்ளவில்லை. இதனை பார்த்த இந்திய வீரர் சிராஜ் அப்படியெல்லாம் கோஷமிட வேண்டாம் என்பது போல வாயில் விரல் வைத்து சைகை காட்டினார். தொடர்ந்து அனைவரையும் அமைதி காக்கவும் அவர் வேண்டி கொண்டார். இதில் ஒருவரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மார்க்ரம் உலக சாதனை
இந்தியா - தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் முறையே தென் ஆப்பிரிக்கா 489 ரன்களும், இந்தியா 201 ரன்களும் எடுத்தன. பின்னர் 288 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட்டுக்கு 260 ரன்கள் சேர்த்து ‘டிக்ளேர்’ செய்தது. இதன் மூலம் இந்தியாவுக்கு 549 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 63.5 ஓவர்களில் 140 ரன்னுக்கு சுருண்டது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா 408 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை ருசித்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ஹார்மர் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.
ஏற்கனவே முதலாவது டெஸ்டில் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்த தென் ஆப்பிரிக்கா தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த 2-வது போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் எய்டன் மார்க்ரம் 9 கேட்சுகளை பிடித்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக கேட்ச் பிடித்த வீரர் என்ற உலக சாதனையை மார்க்ரம் படைத்துள்ளார். இதற்கு முன்னர் இந்திய வீரர் ரகானே ஒரு போட்டியில் 8 கேட்சுகள் பிடித்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அதனை முறியடித்துள்ள மார்க்ரம் புதிய சாதனை படைத்துள்ளார்.
கிரிக்கெட் வீரருக்கு திருமணம்
நடிகை சம்யுக்தா பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இதன் பிறகு அவருக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தன. விஜய்யின் வாரிசு , காபி வித் லவ், துக்ளக் தர்பார், மைடியர் பூதம், உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். சம்யுக்தா குறும்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான கார்த்திக் சங்கர் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இருவருக்கும் ஒரு மகனும் பிறந்தார். இந்த சூழலில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் மகன் , அனிருத்தா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். அனிருத்தா, கடந்த 2012 ஆம் ஆண்டு ஆர்த்தி வெங்கடேஷ் என்ற பெண்ணை திருமணம் செய்தார்.எனினும் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்தனர்.
இந்த நிலையில்தான் சம்யுக்தா, அனிருத்தாவை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொள்ள இருக்கிறார் என பரவலாக பேசப்பட்ட து. மேலும், இருவரும் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் சம்யுக்தா - அனிருத்தாவுக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. ஸ்ரீகாந்த் இல்லத்தில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்ச்சியில் குடும்ப நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். தற்போது சம்யுக்தா - அனிருத்தா திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் இந்த தம்பதிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
பெர்த் பிட்ச் குறித்து ஐ.சி.சி.
ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா மோதும் ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி கடந்த 21-ந் தேதி தொடங்கி அடுத்த நாளே முடிவடைந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. பெர்த் மைதானத்தில் இரண்டு நாளில் முடிந்த முதல் டெஸ்ட் போட்டி இதுதான். இதனால் இந்த பிட்ச் பல்வேறு விமர்சங்களுக்கு உள்ளானது. இதனால் ஐசிசி பிட்ச்-ன் மதிப்பு குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தது. அதன்படி ஆய்வு செய்ததில் பிட்ச் மதிப்பு நன்றாக உள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. இந்த மதிப்பீட்டை போட்டி நடுவர் ரஞ்சன் மதுகல்லே வழங்கினார்.
ஐசிசி பிட்ச் மதிப்பீடு அமைப்பில், பிட்ச்சுகளை 'மிகச் சிறந்தது', 'நல்லது', 'சராசரி' , 'திருப்திகரமற்றது' என வகைப்படுத்துகிறது. இதில் ஐ.சி.சியின் நான்கு வகை பிட்ச் மதிப்பீட்டு முறையின்படி, 'மிகவும் நல்லது' என்பது அவர்களின் மிக உயர்ந்த மதிப்பீடாகும். மேலும் இரண்டு நாள் நடந்த போட்டியின் போது பிட்ச் நல்ல கேரி, வரையறுக்கப்பட்ட சீம், ஸ்விங் மற்றும் சரியான பவுன்ஸ் ஆகியவற்றைக் கொண்டிருந்தது என்பதைக் குறிக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
தி.மு.க.வுக்கு வெற்றி பிரகாசமாக உள்ளது: அமைச்சர் துரைமுருகன்
16 Mar 2026சென்னை, வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு வெற்றி பிரகாசமாக உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத்தேர்தல் அதிகாரி ஆலோசனை
16 Mar 2026சென்னை, தமிழக பேரவைத் தேர்தலையொட்டி அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நேற்று (மார்ச் 16) ஆலோசனை மேற்கொண்டார்.
-
பா.ஜ.க.வுடன் செல்பவர்கள் யாராக இருந்தாலும் தோல்வி நிச்சயம்: டி.கே.எஸ்.இளங்கோவன் கருத்து
16 Mar 2026சென்னை, பா.ஜ.க.வுடன் யார் சென்றாலும் அவர்களுக்கு தோல்விதான். பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால்தான் 2001-இல் தி.மு.க. தோற்றது.
-
காவல்துறையினரை தாக்கி தப்பிக்க முயற்சி: சென்னை மாதவரத்தில் ரவுடி என்கவுண்டர் சுட்டுக்கொலை
16 Mar 2026சென்னை, சென்னை மாதவரத்தில் ரவுடி தொப்பை கணேஷ் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
-
6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சீனா-வடகொரியா இடையே விமான சேவை தொடக்கம்
16 Mar 2026பெய்ஜிங், சீனா- வடகொரியா இடையேயான விமானப் போக்குவரத்து கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டில் முற்றிலும் நிறுத்தப்பட்டது.
-
மகளிா் ஆதரவு இருக்கும் வரை, தி.மு.க. அரசை எவராலும் வீழ்த்த முடியாது: முதல்வர்
16 Mar 2026சென்னை, பெண்கள் நம்முடன் இருக்கும்போது, நம்மை யாராலும் வீழ்த்த முடியாது.
-
வாக்குகளை எண்ண கூடுதல் இடைவெளி: தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்
16 Mar 2026புதுடெல்லி, வாக்கு எண்ணிக்கைக்கு கூடுதல் இடைவெளி உள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்ததை அடுத்து இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளால் பாராளுமன்ற மாநிலங்களவைக்கு வரும் 19, 20-ம் தேதிகளில் விடுமுறை
16 Mar 2026டெல்லி, நவராத்திரி, ரம்ஜான், குடீ பாடவா ஆகிய பண்டிகைகள் வருவதால் பாராளுமன்ற மாநிலங்களவைக்கு வரும் 19,20ம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தூத்துக்குடி, விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் 5 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
16 Mar 2026மதுரை, தூத்துக்குடி, விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டு பிடிக்கும் வகையில் சந்தேகத்துக்கு இடமான 5 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு டி.என்.ஏ பரிசோதன
-
எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு
16 Mar 2026சென்னை, 2025-ம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது தமிழ் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகளுக்கு தேர்தல் ஆணையம் புதிய கட்டுப்பாடு
16 Mar 2026சென்னை, மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகளுக்கு தேர்தல் ஆணையம் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.
-
அடுத்த ஒரு மாதத்திற்கு தி.முக.வினர் ஓய்வின்றி தோ்தல் பணியாற்றுங்கள்: கட்சியினருக்கு துணை முதல்வர் உதயநிதி அறிவுரை
16 Mar 2026சென்னை, அடுத்த ஒரு மாதம் தி.மு.க.வினா் ஓய்வின்றி தோ்தல் பணியாற்ற வேண்டும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.
-
அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள்: விளம்பரங்கள், போஸ்டர்களை அகற்றும் அடிக்கும் பணி தீவிரம்
16 Mar 2026சென்னை, சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், தமிழகம் முழுவதும் விளம்பரங்கள் மீது பெயிண்ட் அடித்து மறைக்கும் பணிகளும் போஸ்டர்கள் அகற்றும் பணிகளும
-
ஈரானில் இருந்து மீட்கப்பட்ட 550 இந்தியர்கள் ஆர்மீனியாவுக்கு ஜெய்சங்கர் நன்றி
16 Mar 2026புதுடெல்லி, ஈரானில் இருந்து அர்மீனியா வழியாக 550க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
-
மேற்குவங்க மாநிலத்திற்கு புதிய தலைமைச்செயலாளர் நியமனம்: தேர்தல் ஆணையம் உத்தரவு
16 Mar 2026கொல்கத்தா, மேற்கு வங்க மாநிலத்தின் புதிய தலைமைச் செயலாளராக துஷ்யந்த் நாரியாலாவை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
நேபாளத்தில் சாலை விபத்தில் பலியான 7 பேர் உடல்களை கொண்டு வர தமிழ்நாடு அரசு நடவடிக்கை
16 Mar 2026சென்னை, நேபாளத்துக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டபோது சாலை விபத்தில் சிக்கி 7 தமிழா்கள் உயிரிழந்தனா்.
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி பேச்சா? வதந்திகளை நம்ப வேண்டாம் என த.வெ.க. திட்டவட்டமாக மறுப்பு
16 Mar 2026சென்னை, தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், பா.ஜ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாகத் தகவல் வெளியானதற்கு அக்கட்சியின்
-
மத்திய கிழக்கில் மோதலால் 4,335 இந்திய விமானங்கள் ரத்து: மத்திய அரசு தகவல்
16 Mar 2026புதுடெல்லி, மேற்காசிய மோதலால் காரணமாக இந்திய விமானங்கள் ரத்து குறித்து மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
-
சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்
16 Mar 2026லாஸ்ஏஞ்சல்ஸ், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நேற்று நடைபெற்ற ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை ஒன் பேட்டில் ஆஃப்டர் அனத
-
த.வெ.க. - என்.டி.ஏ. கூட்டணி குறித்து இதுவரை பேச்சு நடத்தப்படவில்லை: செங்கோட்டையன் பேட்டி
16 Mar 2026கோவை, தமிழக வெற்றிக்கழகம் மற்றும் என்.டி.ஏ. கூட்டணி குறித்து இதுவரை எந்த விதமான கருத்து பரிமாற்றமும் நடைபெறவில்லை என்று த.வெ.க.
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : சென்னையில் விசாரணையை நடத்த சி.பி.ஐ.க்கு விஜய் கடிதம்
16 Mar 2026சென்னை, கரூா் கூட்ட நெரிசல் வழக்கில் சென்னை அல்லது தமிழ்நாட்டில் ஏதேனும் ஓரிடத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சி.பி.ஐ.
-
பாலஸ்தீனத்துக்கு விடுதலை வேண்டும்: ஆஸ்கர் விழா மேடையில் ஹாலிவுட் நடிகர் ஜேவியரின் பேச்சால் பரபரப்பு
16 Mar 2026லாஸ்ஏஞ்சல்ஸ், ஹாலிவுட் நடிகர் ஜேவியர் பார்டெம் ஆஸ்கர் விருது விழாவில், “போர் வேண்டாம். பாலஸ்தீனத்துக்கு விடுதலை வேண்டும்” எனப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
திருப்பூரில் இருவேறு இடங்களில் உரிய ஆவணங்கள் இல்லாத 41 லட்சம் ரூபாய் பறிமுதல்: தேர்தல் பறக்கும் பட்டையினர் நடவடிக்கை
16 Mar 2026திருப்பூர், திருப்பூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ. 41 லட்சம் தேர்தல் பறக்கும் பட்டையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
-
தேர்தல் நடத்தை விதி அமல் எதிரொலி: மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் பொதுமக்கள் குறைதீர் மனுக்கள் பெட்டி
16 Mar 2026கோவை, தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் பொதுமக்கள் குறைதீர் மனு பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
16 Mar 2026- மன்னார்குடி ராஜகோபலசுவாமி தங்க சூரிய பிரபை வேணுகோபாலன் திருக்கோலமாய் காட்சி.
- தொட்டியம் காளியம்மன் பவனி


