முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரிவால்வர் ரீட்டா திரை விமர்சனம்

திங்கட்கிழமை, 1 டிசம்பர் 2025      சினிமா
Revolver-Rita 2025-12-01

Source: provided

கீர்த்தி சுரேஷின் வீட்டுக்குள் புகுந்து எதிர்பாராமல் உயிரிழக்கும் ரவுடி சூப்பர் சுப்பராயனை, அவரது மகன் சுனில் தேடி வருகிறார். உடலை அப்புறப்படுத்தும் முயற்சியில் கீர்த்தி சுரேஷ் ஈடுபடும் போது, போலீஸ் அதிகாரி ஜான் விஜய், கீர்த்தி சுரேஷை பழிவாங்க துடிக்கிறார்.  பிணத்தை தேடி ஒரு ரவுடி கூட்டமும், கீர்த்தி சுரேஷ் பின்னால் போலீஸும் மேற்கொள்ளும் பயணமே இந்த ரிவால்வர் ரீட்டா. தேசிய விருது பெற்ற கதையின் நாயகி கீர்த்தி சுரேஷ், அளவான நடிப்பு மூலம் ரீட்டாவாக பார்வையாளர்கள் மனதில் நின்று விடுகிறார். கீர்த்தி சுரேஷின் அம்மாவாக வரும் ராதிகா, தனது சிறப்பான நடிப்பால் ஸ்கோர் செய்கிறார். தெலுங்கு நடிகர் சுனில், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட அனைவரும் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். ஷான் ரோல்டன் இசை ஓகே.ரகம். ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணா.பி, பிரமாண்டமாக காட்சிப் படுத்தியிருக்கிறார்.  எழுதி இயக்கியிருக்கும் ஜெ.கே.சந்துரு, நாம் பழக்கப்பட்ட ஒரு கதைக்கருவை எடுத்து, அதை வேறு கோணத்தில் சொல்லி பார்வையாளர்களை சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார். குறிப்பாக ராதிகாவின் காட்சிகள் நிச்சயம் சிரிப்பை வரவழைக்கும். மொத்தத்தில், ரிவால்வர் ரீட்டா குறி பாத்து சுடல .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து