முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. தேர்தல் அறிக்கை தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்க புதிய செயலி அறிமுகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்

சனிக்கிழமை, 3 ஜனவரி 2026      தமிழகம்      அரசியல்
DMK-2026-01-03

சென்னை, தி.மு.க. தேர்தல் அறிக்கை தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்க புதிய செயலியை முதல்வர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார். 

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- எல்லார்க்கும் எல்லாம் என்ற சீரிய சிந்தனையோடு ஆட்சி செய்து வரும் கழகத்தலைவர், வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கழகத்தின் தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் பொருட்டு , கழகத் துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி., தலைமையில் அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, கோவி செழியன், சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசி, எழிலன், முன்னாள் எம்.பி டிகேஎஸ் இளங்கோவன், அப்துல்லா, கார்த்திகேய சிவசேனாபதி, கான்ஸ்டண்டைன் ரவீந்திரன், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஜி. சந்தானம், தொழிலதிபர் சுரேஷ் சம்பந்தம் ஆகிய 12 பேர் அடங்கிய தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவை அமைத்திருந்தார். இக்குழுவினர் பொதுமக்கள் , வணிகர்கள், விவசாயிகள், இளைஞர்கள் , பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களையும் நேரடியாக சந்தித்து பரிந்துரைகளை பெரும் பொருட்டு தமிழ்நாடு முழுக்க பயணம் செய்ய உள்ளனர்.

துவக்க நிகழ்வாக அண்ணா அறிவாலயத்தில் நேற்று (03.02.2026 சனிக்கிழமை) கழகத் தலைவர் பொதுமக்களின் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் பெறும் வகையிலான அலைபேசி எண், வலைதள விவரம், சமூக வலைதள தொடர்புகள், செயற்கை நுண்ணறிவு வலைவாசல் ஆகியவற்றை அறிமுகம் செய்து வைத்தார். பொது மக்கள் கீழ்கண்ட தளங்களின் மூலம் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் கழகத்திற்கு வழங்கலாம். 

தொலைபேசி: 08069446900, வாட்ஸ்அப் (WhatsApp): 9384001724, மின்னஞ்சல்: [email protected], இணையதளம்: http://www.dmk.in/ta/manifesto2026, சமூக வலைத்தளங்கள்: dmkmanifesto26, செயற்கை நுண்ணறிவுத் தளம்: tnmanifesto.ai.

2021 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் 505 தேர்தல் வாக்குறுதிகளை அளித்தது. அவற்றில் 364 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு செயல்பாட்டில் இருக்கின்றன. 40 அறிவிப்புகள் அரசின் பரிசீலனையில் இருக்கிறது. மொத்தம் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் இது 80 சதவீதம் ஆகும்.

மீதமுள்ள 101 வாக்குறுதிகளில் 37 வாக்குறுதிகள் மத்திய பாஜக அரசு ஒத்துழைக்காததால் நிலுவையில் உள்ளன. குறிப்பாக நீட் தேர்வு ரத்து, திருக்குறளை தேசிய நூலாக அறிவிப்பது போன்ற வாக்குறுதிகள் மத்திய அரசின் ஒத்துழைப்பு கிடைத்தால் மட்டுமே நிறைவேற்றப்படக் கூடிய வாக்குறுதிகள் ஆகும். 64 திட்டங்கள் தற்போது நடவடிக்கைக்கு எடுத்துக்கொள்ளப்படாத சூழல் உள்ளது. உள்ளூர் போராட்டங்கள்- ஒத்துழைப்பின்மை, தேவைப்படாத சூழல் நிலவுவது போன்ற காரணங்களால் இந்த 64 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்படாமலேயே பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது முதல்வர்  மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் அரசு.  தமிழ்நாட்டு மக்களின் பேராதரவோடு அடுத்து அமையவிருக்கும் திராவிட மாடல் 2.0 அரசுக்கான தேர்தல் அறிக்கையை முனைப்புடன் தயாரித்து வருகிறது கழகம். திராவிடமாடல் 2.o அரசில் மக்களின் குரல்களும் வலுவாக ஒலிக்க வேண்டும் என்பதால் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை, பரிந்துரைகளை வழங்கி தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பில் எல்லோரும் பங்கு பெற வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து