முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்துக்கு ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்கீடு: இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2026      தமிழகம்
CM-2-2026-02-17

சென்னை, தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட்டில் அரசு ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்துக்கு ரூ. 11,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-2027 ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நேற்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அப்போது அரசு அலுவலர்கள் நலன் குறித்து அவர் பேசியதாவது:

அரசுத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி மக்களிடம் எடுத்துச் செல்ல பெரும்பங்கு வகிக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் காப்பதில் இந்த அரசு முன்னுரிமை வழங்கி வருகின்றது. அனைத்து தடைகளையும் கடந்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் நலன்களை தமிழக அரசு காத்து வருகின்றது. நிறுத்திவைக்கப்பட்ட அகவிலைப்படி தொகை வழங்கப்பட்டது. ஈட்டிய விடுப்பினை ஒப்படைப்பு செய்து பணமாக பெற்றுக் கொள்ளும் நடைமுறை மீண்டும் அரசு செயல்படுத்தியது.

அரசு பணியாளர்கள் விபத்தில் மரணமடைந்தால் ரூ. ஒரு கோடி, இயற்கை மரணமடைந்தால் ரூ. 10 லட்சம் காப்பீடு கொடுக்கப்பட்டது. திருமண முன்பணம், பண்டிகை முன்பணம் போன்றவற்றை அரசு உயர்த்தி வழங்கியது. பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பை 12 மாதங்களாக அரசு உயர்த்தியது.

அனைத்துக்கும் மகுடமாக அமையும் வகையில், அரசுப் பணியாளர்களில் 22 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அரசு அறிமுகம் செய்தது. பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு இணையான பணத்தை பெறுவார்கள். கடைசி மாத சம்பளத்தில் 50 சதவீதம் மாத ஓய்வூதியம் வழங்கப்படும். இடைக்கால பட்ஜெட்டில், இந்த திட்டத்தை செயல்படுத்த அரசின் கூடுதல் பங்களிப்புக்காக ஓட்டுமொத்தமாக ரூ. 11,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து