முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விடியல் பேருந்துகளில் பெண்கள் 881 கோடி முறை பயணம் தமிழகத்தில் சராசரியாக பெண்கள் மாதம் 888 ரூபாய் சேமித்துள்ளனர்: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2026      தமிழகம்
Tangam 2025-03-14

சென்னை, தமிழ்நாடு அரசின் விடியல் பேருந்து திட்டத்தில் 881 கோடி முறை மகளிர் பயணம் செய்துள்ளதாகவும், தமிழகத்தில் சராசரியாக பெண்கள் மாதம் 888 ரூபாய் சேமித்துள்ளனர் என்றும்  அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-2027ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் உரையின்போது அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்ததாவது:- ”மாநகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் விடியல் பேருந்து திட்டத்தில் 881 கோடி முறை பயணம் செய்து பெண்கள் பயனடைந்துள்ளனர். இதன்மூலம் சராசரியாக பெண்கள் மாதம் ரூ. 888 சேமித்துள்ளார்கள். மேலும், மாநிலம் முழுவதும் 6 லட்சம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 1.40 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை மாநிலம் முழுவதும் 19 தோழி விடுதிகள் அமைக்கப்பட்டு, பெண்கள் பயனடைந்து வருகின்றனர். மகளிர் நலன் காக்கும் இந்த திட்டங்களை பல மாநிலங்கள் பின்பற்ற தொடங்கி உள்ளன. மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் சிசு இறப்பு விகிதம் தேசிய சாராசரியை விட தமிழ்நாட்டில் குறைவாகவே உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து