முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : சென்னையில் விசாரணையை நடத்த சி.பி.ஐ.க்கு விஜய் கடிதம்

திங்கட்கிழமை, 16 மார்ச் 2026      தமிழகம்
vijay 2025-01-06

சென்னை, கரூா் கூட்ட நெரிசல் வழக்கில் சென்னை அல்லது தமிழ்நாட்டில் ஏதேனும் ஓரிடத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சி.பி.ஐ. மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதிக்கு நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான வழக்கில் த.வெ.க. தலைவர் விஜய்யிடம் சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஏற்கெனவே ஜனவரியில் இரண்டு முறை சி.பி.ஐ. முன் ஆஜராகி கரூா் கூட்ட நெரிசல் தொடா்பாக விளக்கமளித்தார் விஜய். பின்னர் 3 ஆவது முறையாக மாா்ச் 9 ஆம் தேதி விஜய்க்கு சம்மன் வழங்கப்பட்ட நிலையில் மார்ச் 15 ஆம் தேதி ஒத்திவைக்க கோரினார். அதன்படியே நேற்று முன்தினம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தில்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் அவரிடம் 7 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறுவதையொட்டி காரணமாக அரசியல் ஈடுபாடுகளை மேற்கோள் காட்டி, சென்னை அல்லது தமிழ்நாட்டின் எந்த அலுவலகத்திலாவது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சி.பி.ஐ.-யிடம் விஜய் கோரிக்கை வைத்துள்ளார். சி.பி.ஐ.-க்கும் இந்த வழக்கை விசாரிக்கும் ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி அஜய் ரஸ்தோகிக்கும் விஜய் இதுபற்றி கடிதம் எழுதியுள்ளார். 

தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டதால் கட்சி சார்பாக தனக்கு பணிகள் இருப்பதால் சி.பி.ஐ. விசாரணையை சென்னையில் அல்லது தமிழகத்தில் வேறு பகுதிகளில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்துள்ளார். ஆனால் 3-வதாக டெல்லியில் விஜய் ஆஜராவதற்கு முன்னரே மார்ச் 14-ம் தேதி அவர் இந்த கடிதத்தை எழுதியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து