முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய கிழக்கில் மோதலால் 4,335 இந்திய விமானங்கள் ரத்து: மத்திய அரசு தகவல்

திங்கட்கிழமை, 16 மார்ச் 2026      இந்தியா
Air

புதுடெல்லி, மேற்காசிய மோதலால் காரணமாக இந்திய விமானங்கள் ரத்து குறித்து மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது துணை நிலை கேள்வி ஒன்றிற்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு பதிலளித்து பேசினார். மேற்காசியாவில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் தொடர்புடைய மோதலால் பதற்ற நிலை நீடிக்கிறது. இதனை தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் வான்வெளி பகுதிகள் மூடப்பட்டு உள்ளன. இதனையடுத்து, விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. 

இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு, விமான சேவைகளின் பாதுகாப்புக்கே முன்னுரிமை கொடுப்பது முக்கியம். இதனால், பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. ஒட்டுமொத்தத்தில், இந்தியாவின் 4,335 விமானங்கள், வெளிநாடுகளை சேர்ந்த 1,187 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன என்று கூறினார். 

இந்த நெருக்கடியான சூழலில், விமான பாதுகாப்பு முக்கியம் என்பதுடன், வான்வெளி மூடப்பட்டுள்ளபோது, அந்த பகுதிகளில் விமானங்களை இயக்க வேண்டிய அவசியம் நமக்கு இல்லை என்றார். எனினும், இந்த சூழலிலும் 2 லட்சத்து 19 ஆயிரத்து 780 பேர் பயணம் செய்துள்ளனர் என கூறினார். பயணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். வான்வெளி திறந்திருப்பதும் முக்கியம். அதன்பின்னரே சீரான விமான சேவையை நாம் தொடர முடியும் என்றும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து